சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் மட்டுமே நடக்கிறது. மற்ற அணிகள் ஆடும் போட்டிகள் மட்டும்தான் பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடக்கிறது. இந்நிலையில், இன்று ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதும் போட்டி லாகூரில் நடந்து வருகிறது. ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் போட்டியிடும் இருநாடுகளின் தேசிய கீதமும் ஒலிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் தேசிய கீதத்துக்காக வரிசைக்கட்டி நின்றனர். அப்போது திடீரென ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்துக்கு பதில் “பாரத பாக்ய்வி தாதா..’ என இந்தியாவின் தேசிய கீதம் இடையிலிருந்து ஒலிக்கப்பட்டது.
Champions Trophy: பாகிஸ்தானில் ஒலித்த இந்திய தேசிய கீதம் – குழம்பிய ரசிகர்கள் | India’s National Anthem at Pakistan
Share