Browsing: விளையாட்டு

GT v MI: `நானும் டெத் பௌலர்தான்' நிரூபித்த சாம்ஸ்; கொண்டாட்ட மும்பை; அதிர்ஷ்டத்தைத் தேடும் குஜராத்!

விடியற்காலை 6 மணிக்கு வர வேண்டிய பந்தயத்திற்கு சாவகாசமாக சாயங்காலம் 6 மணிக்கு வந்த கதையை மீண்டும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். எப்போது வந்தால் என்ன, ஆட்டத்திற்கு வருகிறார்களே அதுவே போதும் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டதால் குஜராத்திற்கு எதிரான மும்பையின் இந்த வெற்றி கொண்டாடத்தக்கதாகவே மாறியிருக்கிறது.Hardik Pandya – Rohit Sharmaபோட்டியை மும்பை வென்றாலும் போட்டிக்கு முன்பான டாஸை குஜராத்தான் வென்றிருந்தது. டார்கெட்டை சேஸ் செய்யப்போவதாக ஹர்திக் பாண்டியா அறிவித்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ்…

ஹைதராபாத்துக்கு எதிராக வெற்றி – டேவிட் வார்னர், பாவலுக்கு கேப்டன் ரிஷப் பந்த் பாராட்டு | rishabh pant praises david warner and rovman powell over victory against srh

Last Updated : 07 May, 2022 07:10 AM Published : 07 May 2022 07:10 AM Last Updated : 07 May 2022 07:10 AM மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. 208 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.…

IPL 2022 GT vs MI -I do not have build up body like Dhoni or Russel But still I can do it -Gujarat Titans player Saha – News18 Tamil

குஜராத் அணியின் தொடக்க வீரராக செயல்பட்டு வருபவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் தான் ஏன் சோபிக்க முடியாது என்று தனக்கும் திறமை இருக்கிறது என்று தன்னம்பிக்கைப் பேட்டியளித்துள்ளார்.சஹா டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தவர், ஆனால் ரிஷப் பண்ட் என்ற ஒரு புதிய சக்தி உள்ளே நுழைந்து அதகளம் செய்யத் தொடங்கியவுடனும், காயமும் சஹாவின் சகாப்தத்தைக் குறுக்கியது, அவரை ஓய்வு பெறுமாறு திராவிடும் அறிவுரை வழங்கினார், பத்திரிகையாளர்…

Champions League: ரியல் மாட்ரிட் – எத்தனை முறை எரிந்தாலும் எழுந்து வரும் ஃபீனிக்ஸ்! | Real Madrid rises like a phoenix every time in the champions league

இப்படி எத்தனையோ போட்டிகளில் ஆட்டத்தை மாற்றியிருக்கிறது அந்த அணி. ஆனால், இந்த வெற்றி கொண்டாடப்படவேண்டியதற்கான முக்கியக் காரணம், இப்போது இருக்கும் அணி முந்தைய அணிகளைப் போன்றது அல்ல. செர்ஜியோ ரமோஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஆளுமைகள் இல்லை. மார்செலோ, மோட்ரிச் போன்றவர்களுக்கு வயதாகிவிட்டது. ஒருவரால் ஆட்டத்தைத் தொடங்கவே முடியவில்லை. ஒருவரால் முடிக்க முடியவில்லை. இப்படி ஒரு அணிதான் மில்லியன்கள், இல்லை பில்லியன்கள் மதிப்பு மிக்க… இளம் வீரர்களும், சூப்பர் ஸ்டார்களும் நிறைந்த அணிகளை புரட்டி எடுத்திருக்கிறது. மான்செஸ்டர்…

IPL 2022 | தனது பழைய அணியை பந்தாடிய வார்னர்: டி20-ல் அதிக அரை சதம் பதிவு செய்து சாதனை | david warner master stroke SRH in ipl 2022 and he says no need extra motivation

மும்பை: தனது முன்னாள் ஐபிஎல் அணியை தனது அபார பேட்டிங் திறனால் பந்தாடியுள்ளார் டெல்லி வீரர் டேவிட் வார்னர். அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர். கடந்த 2009 முதல் ஐபிஎல் அரங்கில் கிரிக்கெட் விளையாடி வருகிறார் அவர். இதுவரை மொத்தம் 158 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்…

Video:வலது கை பேட்ஸ்மேனாக மாறி பவுண்டரி அடித்த வார்னர்… திகைப்பில் புவனேஷ்வர் குமார்

ஐபிஎல் 15-வது சீசனின் 50-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டேவிட் வார்னர், ரோவ்மேன் பவலின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 207 ரன்கள் எடுத்தது.தொடக்க வீரர் டேவிட் வார்னர் 58 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார். அதில் 12 பவுண்டரி 3 சிக்ஸர்களும் அடங்கும். ஆரம்பத்தில்…

DC v SRH: `சதம் தேவையில்லை, வெற்றி போதும்' இதயங்களை வென்ற வார்னரும், போராடித் தோற்ற பூரனும்!

ஐ.பி.எல்லில் ஹைதராபாத்தைப் பொறுத்தவரை அதற்கென பரம வைரிகள் கிடையாது. எல்லா அணி ரசிகர்களின் இரண்டாவது பேவரைட்டாகவோ மூன்றாவது பேவரைட்டாகவோ ஹைதராபாத் அணியே இருக்கும். எல்லாம் போன சீசன் வரைதான். வார்னர் வெளியே உட்கார வைக்கப்பட்டதிலிருந்தே அணிக்கு இருந்த நல்ல பெயர் மங்கத் தொடங்கியது. ஏலத்தில் வார்னரை டெல்லி அணி யாரும் எதிர்பார்த்திடாத விலையில் வாங்க, அன்றே சென்னை – மும்பை, சென்னை – பெங்களூரு ஆட்டங்கள் அளவுக்கு டெல்லி – சன்ரைசர்ஸ் போட்டிக்கும் எதிர்பார்ப்பு எழுந்தது. வெளியே…

IPL 2022 | கைகொடுக்காத ஓப்பனிங், பின்வரிசை வீரர்கள் – டெல்லியிடம் வீழ்ந்த ஹைதராபாத்

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியுள்ளது. 208 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு இரண்டாவது ஓவரே அதிர்ச்சி கொடுத்தார் கலீல் அகமது. அவரின் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆனார் சன்ரைசர்ஸ் ஓப்பனிங் வீரர் அபிஷேக் ஷர்மா. மற்றொரு ஓப்பனிங் வீரர் கேன் வில்லியம்சன் 4 ரன்களோடு நடையை கட்டினார். இதன்பின் ராகுல் திரிபாதி மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து…

ipl 2022 chennai team lost against bengaluru | பேட்டிங்கில் தடுமாற்றம்

ஐ.பி.எல் தொடரின் 49-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கோலியும், டூ ப்ளிஸிஸும் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தைத் தொடங்கினர். 22 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டூ ப்ளஸிஸ் ஆட்டமிழந்தார்.அவரைத் தொடர்ந்து, 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 3 ரன்களில்…

1 424 425 426 427 428 430