Browsing: விளையாட்டு

Paul Stirling: அயர்லாந்து கிரிக்கெட்டின் ஆபத்பாந்தவன்; 15 ஆண்டுகளாகத் தொடரும் ஆதிக்கம்! | Paul Stirling – The savior of Ireland Cricket for the past 15 years

நாளின் முடிவில் அப்போராட்டம் தோல்வியில் முடிந்தாலும் வெற்றியைத் தழுவினாலும், விலை மதிப்பற்றதாகத்தான் அவரது இன்னிங்ஸ்கள் அமைந்துள்ளன. அயர்லாந்துடன் ஆடினாலே இவரது ஒரு பெரிய இன்னிங்ஸை எதிர்பார்த்துதான் மற்ற அணிகள் தற்போதெல்லாம் ஆட வேண்டியுள்ளது. இவற்றையும் தாண்டி உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் டி20 லீக்குகளிலும், டி10 தொடரிலும் ஒன்றுவிடாமல் அத்தனையிலும் ஸ்டிர்லிங்கின் சாம்ராஜ்யம் தொடர்கிறது. அவை எல்லாவற்றிலும் பௌலர்களைச் சரணடையச் செய்வதாகவே அவரது ஸ்ட்ரைக் ரேட் இலக்கங்கள் மாறுகின்றன. பண்ட்டின் பயமறியா இயல்போடு இங்கிலாந்தின் அட்டாக்கிங் கிரிக்கெட் முறையையும்…

ரிஷப் பந்த் பயமில்லாதவர் – இங்கிலாந்து கேப்டன் புகழாரம்

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 260 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 42.1 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 113 பந்துகளில் 125 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது இந்திய…

தங்கம் வென்று வரலாறு படைத்தார் இந்திய வீரர் மைராஜ் அகமது கான் – News18 Tamil

46 வயதான மூத்த இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் வீரர் மைராஜ் அகமது கான் ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் ஆடவர் ஸ்கீட் பிரிவில் முதன் முதலாக தங்கம் வென்று வரலாறு படைத்தார்.40 ஷாட்கள் கொண்ட இறுதிப் போட்டியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவரான மைராஜ் அகமது கான் 37 முறை சரியாகச் சுட்டு தங்கம் வென்றார். கொரியா வீரர் மின்சு கிம் 36 புள்ளிகளுடன் வெள்ளியும் பிரிட்டனின் பென் லெவெலின் 26 புள்ளிகள் பெற்று வெண்கலமும் வென்றனர்.குவாலிஃபை ஆவதற்கு மைராஜ்…

அலிசன் ஃபெலிக்ஸ்: உசைன் போல்ட் சாதனையை முறியடித்தவர்; பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள் பெற்றுத்தந்தவர்! | The inspiring story of American track and field athlete Allyson Felix

அலிசன் ஃபெலிக்ஸ்Ashley Landis2020இல் கொரோனா, ஓடிக்கொண்டிருந்த மக்களை நிற்கச் செய்தது. ஆனால் அப்போதும் தெருக்களிலும் கடற்கரையிலும் காலியாக இருந்த மைதானங்களையும் பயன்படுத்தி தாயான பின்னர் களம் காணப் போகும் முதல் ஒலிம்பிக்ஸிற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் அலிசன். ஜூன் 2021இல் அலிசன், அதாவது Nike நிறுவனத்திடம் இருந்து விலகிய இரண்டே ஆண்டுகளில் தன் சொந்த காலணி நிறுவனத்தை சாய்ஷ் (Saysh) என்ற பெயரில் தொடங்கினார். தன் சொந்த நிறுவனத்தின் காலணி அணிந்து 2021இல் நடந்த 2020 டோக்கியோ…

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஞ்சும் மவுத்கில்லுக்கு வெண்கல பதக்கம் | Shooting competition

Last Updated : 18 Jul, 2022 06:26 AM Published : 18 Jul 2022 06:26 AM Last Updated : 18 Jul 2022 06:26 AM அஞ்சும் மவுத்கில் புதுடெல்லி: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மவுத்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். தென் கொரியாவின் சாங்வான் நகரில்ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3…

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு – News18 Tamil

இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார், நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் முதல் ஒருநாள் போட்டிதான் பென் ஸ்டோக்ஸ் ஆடும் கடைசி ஒருநாள் போட்டி. இது இங்கிலாந்துக்கு ஒரு ஷாக்தான்.இங்கிலாந்துக்காக 104 ஒருநாள்போட்டிகளில் ஆடிய பென் ஸ்டோக்ஸ் 39.44 என்ற பேட்டிங் சராசரி வைத்துள்ளார். 2919 ரன்களை மட்டும் எடுத்துள்ளார். இந்த வடிவத்தில் 3 சதங்கள் 21 அரைசதங்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 95.26. 38 பவுண்டரி…

ENG vs IND: தாக்குப்பிடி, பின் திருப்பியடி – பண்ட்டின் பாட்ஷா பார்முலாவும், பாண்டியாவின் மேஜிக்கும்!

மான்செஸ்டரில் மான்ஸ்டர் அவதாரம் எடுத்து பண்ட்டும் பாண்டியாவும் இங்கிலாந்தின் கோப்பைக் கனவை அடித்து நொறுக்கி ஒருநாள் தொடரை வென்று கொடுத்துள்ளனர். இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை மட்டும் சமன் செய்ய அனுமதித்த இந்தியா டி20, ஒருநாள் தொடர் இரண்டையுமே வென்றுள்ளது.கோப்பை யாருக்கென முடிவு செய்யும் மூன்றாவது போட்டி கடினமானதாக இருக்குமென்றே எதிர்பார்க்கப்பட்டது. கடைசியாக இக்களத்தில் நடைபெற்ற ஒன்பது போட்டிகளில், ஆறில் 290-க்கும் அதிகமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்ற தரவு மட்டுமல்ல, பும்ரா இல்லாததும் ஹை ஸ்கோரிங்…

IND vs ENG | ரிஷப் பந்தின் மெய்டன் சதம் – இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி | IND vs ENG | India won by 5 wkts against england in third one day match

ஓல்டு டிராபோர்ட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக சதம் விளாசினார். 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுஇருந்தன. இந்நிலையில் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மான்செஸ்டரிலுள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை…

தொடர்ந்து அசத்தும் பி.வி.சிந்து! சீன வீராங்கனையின் மன உறுதியைக் குலைத்து வெற்றி!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து அசத்தி வருகிறார், சீன வீராங்கனை ஹான் யூ-வை எதிர்கொண்டு அவரை 3 செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய் ஹான் யூ கைப்பற்றினார்.பின்னர் சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார் .இதனால் 17-21, 21-11, 21-19. என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.முதல் செட்டில் 15-15 என்று சமநிலை…

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் – இறுதிச் சுற்றில் பி.வி. சிந்து | PV Sindhu reaches final in singapore Open badminton

Last Updated : 17 Jul, 2022 06:29 AM Published : 17 Jul 2022 06:29 AM Last Updated : 17 Jul 2022 06:29 AM சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார். சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற நேர்…

1 389 390 391 392 393 430