Browsing: விளையாட்டு

மெஸ்ஸி அசிஸ்ட்: கோல் பதிவு செய்த எம்பாப்பே, நெய்மர் | எழுந்து நின்று பாராட்டிய ரசிகர்கள் | Opposition team Fans standing ovation Messi for assist Neymar Mbappe score goals

லீக் 1 தொடரில் டூலூஸ் அணிக்கு எதிராக PSG சார்பில் எம்பாப்பே மற்றும் நெய்மர் கோல் ஸ்கோர் செய்ய அசிஸ்ட் செய்து உதவியுள்ளார் லியோனல் மெஸ்ஸி. அவரது செயலுக்காக எதிரணியின் ஆதரவாளர்கள் உட்பட மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்து தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். கால்பந்தாட்ட களத்தில் மாயமானை போல ஓடி, கோல் பதிவு செய்வார் மெஸ்ஸி. இதுதான் அவரது வழக்கமும் கூட. ஆனால் நடப்பு லீக் 1 தொடரில் டூலூஸ் அணிக்கு எதிராக…

IND vs HKG: ராகுலிடம் இல்லாத இன்டென்ட்டை வெளிப்படுத்திய ஹாங்காங்; இந்தியா சரிசெய்ய வேண்டியது என்ன? | KL Rahul lacks intent, while Suryakumar once again shines for India against Hongkong

அடுத்ததாக, ராகுலுக்கு பார்ட்னரான கோலியும் ஃபார்மை மீட்டெடுப்பதில் கவனமாக இருப்பதால் தொடக்கத்தில் ரன்ரேட் மொத்தமாகப் படுத்தேவிட்டது. ஸ்பின்னர்களுக்கு எதிராக தங்களது விக்கெட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்கே அவர்கள் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. குறிப்பாக, ஏசான் கான் மற்றும் முர்டஜாவின் சுழல் இக்கூட்டணிக்கு நெருக்கடி தந்தது. ஏசானின் பௌலிங் சக்லைன் முஸ்டாக்கை நினைவுபடுத்துவதைப் போல இருந்தது, முர்டஜா, வேகத்தைக் குறைத்து ரன் சேர்ப்பதை இன்னமும் கடினமாக்கினார். 10 ஓவர்கள் முடிவில்கூட 70 ரன்கள் மட்டுமே வந்து சேர்ந்திருந்தன. போட்டியின் 33% பந்துகளைச்…

ஆசிய கோப்பை | 6வது பவுலராக பந்துவீசிய கோலி – ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா தகுதி | India win by 40 runs against Hong Kong and make it to the Super Fours

துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரில் தனது 2வது ஆட்டத்தில் ஹாங்காங் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குரூப் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி விதித்த 193 ரன்கள் இலக்கை துரத்திய ஹாங்காங் அணிக்கு நல்ல துவக்கம் அமையவில்லை. ஓப்பனிங் இறங்கிய அந்த அணி வீரர் யாசிம் முர்தாசாவை அர்ஷதீப் சிங் 2வது ஓவரிலேயே அவுட் ஆக்க, அடுத்த சில ஓவர்களில் கேப்டன் நிஜாகத் கான் ரன் அவுட் செய்யப்பட்டார். ஒன்…

செஸ் ஒலிம்பியாட் பதக்கங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது?

பதக்கத்தின் ஒருபுறம் மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் சின்னமும், மற்றொருபுறம் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் லோகோவும் பொறிக்கப்பட்டுள்ளன நன்றி

ஆசிய கோப்பை | கோலி – சூர்யகுமார் இணை அதிரடி; ஹாங்காங் அணிக்கு 193 ரன்கள் இலக்கு | india score 192 runs against hong kong in asia cup t20 match

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி அரைசதமடித்து மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்பினார். அவருடன் சூர்யகுமார் யாதவும் அதிரடி காட்டினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஹாங்காங்குடன் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற…

அதிரடி ஆல்ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோம் ஓய்வு: நியூசிலாந்துக்கு மேலும் அதிர்ச்சி

நியூசிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நன்றி

“எதிர்காலம் முக்கியம்” – நியூசிலாந்து ஆல் ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோம் ஓய்வு அறிவிப்பு | New Zealand cricketer Colin de Grandhomme announced international retirement

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கொலின் டி கிராண்ட்ஹோம் (Colin de Grandhomme) சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காயம் மற்றும் மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் இருப்பதும்தான் இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். 36 வயதான அவர் கடந்த 2012 வாக்கில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டார். 29 டெஸ்ட், 45 ஒருநாள் மற்றும் 41 டி20 போட்டிகளில் அவர் விளையாடி…

174/0 நினைவிருக்கிறதா?- இந்திய அணியை மிரட்டும் ஹாங்காங்- கோலிக்குப் பதில் ரிஷப் பண்ட்?

இன்று துபாயில் ஆசியக் கோப்பை 2022 டி20 தொடரின் 2வது ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. ஹாங்காங்தானே அதனால் ஒருசிலரை உட்கார வைத்து சில வீரர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று ரோஹித் சர்மா நினைத்தால் அது நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில் ஹாங்காங் அணி ஏற்கெனவே 2018-ல் இந்தியாவுக்கு எதிராக 284 ரன்களை விரட்டும்போது 174/0 என்று மிரட்டியதை யார் மறந்தாலும் ரோஹித் மறக்க முடியாது.ஆனால் ஹாங்காங் அணியில் அவர்கள் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் அல்ல, ஆனால்…

“கறுப்பாக இருப்பதை எண்ணி பெருமைப்படுங்கள். அழகு பற்றிய கவலை வேண்டாம்!”- டென்னிஸ் வீராங்கனை செரீனா | Serena Williams talks about the beauty of Black

அமெரிக்காவைச் சேர்ந்த 40 வயதான டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கம் மற்றும் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அந்த விளையாட்டில் உலகின் ஜாம்பவானாக வலம் வருபவர். தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வரும் செரீனா, இந்தத் தொடருக்கு பின்னர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியின் தொடக்கச் சுற்றில் மாண்டினீக்ரோ (Montenegro) நாட்டு வீராங்கனை கோவினிச்சை…

100 மீட்டரை 10.25 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை: இந்தியாவின் அதிவேக ஓட்டக்காரர் அம்லன் | Indian Athlete Amlan Borgohain breaks national record in 100 metre

ஓட்டப் பந்தயம் என்றால் எல்லோருக்கும் உசைன் போல்ட் பெயர்தான் மின்னல் வேகத்தில் நினைவுக்கு வரும். அந்த வகையில் அம்லன் போர்கோஹைனை இந்தியாவின் உசைன் போல்ட் என சொல்லலாம். அதற்கு காரணம் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் அவர் படைத்துள்ள சாதனை தான். 24 வயதான அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். 100 மீட்டர் தூரத்தை 10.25 வினாடிகளில் கடந்து அசத்தியுள்ளார் அவர். அனைத்திந்திய ரயில்வே தடகள சாம்பியன்ஷிப்பில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதன் மூலம்…

1 381 382 383 384 385 443