Browsing: விளையாட்டு

`எங்களுக்கு மட்டும் 15 பீல்டர்கள்' – உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியாவின் அடேங்கப்பா ட்ரிக்ஸ்!

டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள நிலையில், போட்டியின் போது நேரத்தை மிச்சப்படுத்தவும், ஃபீல்டிங் கட்டுப்பாடு அபராதத்தை தவிர்க்கவும் ஒரு தனித்துவமான திட்டத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அமல்படுத்தியிருக்கிறது.டி20 போட்டிகளில் குறிப்பிட்ட நேரத்தைவிட அதிக நேரத்தை பந்து வீசுவதற்காக அணிகள் எடுத்துக் கொள்வது ஒரு வழக்கமாகவே மாறியிருக்கிறது. இது பலவிதங்களில் கிரிக்கெட்டுக்கு பின்னடைவாகவே அமைகிறது. இதைத் தவிர்க்க வேண்டி ஐசிசி ஸ்லோ ஓவர் ரேட் பெனால்டி விதிமுறையை கடந்த ஜனவரி முதல் அறிமுகப்படுத்தியது. இதன்படி, குறிப்பிட்ட நேரத்துக்குள் 20…

T20 WC | சிக்கந்தர் ரசா விளாசல்: சூப்பர் 12-ல் ஜிம்பாப்வே… கொண்டாட்டத்தில் நாட்டு மக்கள்! | zimbabwe enter into super 12 t20 wc sikandar raza people celebrates

ஹோபார்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஜிம்பாப்வே அணி. அந்த அணியின் வெற்றியில் சிக்கந்தர் ரசாவின் பங்கு மிகவும் முக்கியமானது. தங்கள் அணியின் சூப்பர் 12 என்ட்ரியை அந்த நாட்டு மக்கள் பாட்டு பாடியும், கரவொலி எழுப்பியும் கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி முதல் சுற்றான குரூப் சுற்றில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தி அடுத்த சுற்றான…

இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா- பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி சொல்வது என்ன?

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது தொடர்பாக மத்திய அரசிடம் இன்னும் பேச்சுவார்த்தையே தொடங்கவில்லை என பிசிசிஐயின் புதிய தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் நடைபெறும் நிலையில் இந்திய அணி அங்கு செல்லாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பாகிஸ்தானுக்குச் செல்லவேண்டுமா கூடாதா என முடிவெடுக்கவேண்டியது மத்திய…

பயிற்சியின்போது விபரீதம்; தலையில் பலத்த அடி; மருத்துவமனையில் பாகிஸ்தான் வீரர்!

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத்திற்கு தலையில் அடிபட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டியையொட்டி இரு அணிகளின் வீரர்களும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அந்த அணியின் வீரர் முகமது நவாஸ் அடித்த பந்து…

T20 WC | அரையிறுதிக்கு நுழையக் கூடிய 4 அணிகள் – இது சச்சின் கணிப்பு

மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி விளையாடப் போகும் நான்கு அணிகள் எது என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்று, சூப்பர் 12, அரையிறுதி மற்றும் இறுதி என மொத்தம் 45 போட்டிகள் இதில் அடங்கும். இந்தத் தொடரில் டாப் 4 இடங்களை பிடிக்கப் போகும் அணிகள் எவை…

பிசிசிஐ ஒரு…. பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் அஃப்ரிடி காட்டமான பதிவு

டி20 உலகக்கோப்பை 2022 தொடரில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று வரும் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுது்தி உள்ள இந்த போட்டி மெல்போர்ன் மைதானத்தில் அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனிடையே பிசிசிஐ ஆண்டு பொது கூட்டம் முடிந்த பின் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்ற விளக்கத்தை செயலாளர் ஜெய்…

இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் சர்ச்சை – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் பதில் என்ன? | Central Minister Anurag Thakur addresses the India-Pakistan cricket issue

2005-ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று எந்த கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு 2023-ம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை (18.10.2020), இது குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, “ஆசியக் கோப்பை போட்டி பொதுவான இடத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அப்படி நடத்தினால் மட்டுமே இந்தியா…

T20 WC | நமீபியாவை 7 ரன்களில் வீழ்த்திய அமீரகம்; சூப்பர் 12-க்கு முன்னேறியது நெதர்லாந்து | t20 world cup uae won by 7 runs versus namibia netherlands into super 12

ஜிலாங்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் நமீபியாவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதன் மூலம் நெதர்லாந்து கிரிக்கெட் அணி அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. தோல்வியைத் தழுவிய காரணத்தால் முதல் சுற்றோடு நடையை கட்டுகிறது நமீபியா. வெற்றி பெற்ற ஆறுதலுடன் அமீரகமும் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இதனை நமீபியாவுக்கு அமீரகம் கொடுத்துள்ள அப்செட் என்றும் சொல்லலாம். ஆஸ்திரேலியாவின் ஜிலாங் மைதானத்தில்…

முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த தமிழர்; யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சென்னையை சேர்ந்த கார்த்திக் மெய்யப்பன் சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலககோப்பை தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக 8 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் சூப்பர் மீதமுள்ள 4 அணிகளுக்கு தகுதி பெறுவதற்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை மற்றும் யுஏஇ…

Ballon d’Or: “இவ்விருதை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்”- கால்பந்தாட்ட வீரர் கரிம் பென்சிமா! | Karim Benzema dedicates ballon d or award to the people

கால்பந்து உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது Ballon d’Or விருது. பிரான்ஸ் கால்பந்து சங்கத்தால் வருடா வருடம் வழங்கப்படும். இதற்கு முன் இவ்விருதை மெஸ்ஸி அதிகபட்சமாக 6 முறையும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறையும் வென்றிருந்தனர்.இந்த ஆண்டிற்கான (2022) Ballon d’Or விருது நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதிற்காக பென்சிமா, லெவோண்டஸ்கி, கெவின் டி ப்ரூய்ன், முகமது சாலா போன்ற 30 கால்பந்தாட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான விருதை பிரான்ஸ் நாட்டுக்…

1 357 358 359 360 361 443