GT v SRH: ஆட்டநாயகன் உம்ரானின் 5 விக்கெட்டுகள்; சாஹா, திவேதியா, ரஷித் அதிரடியால் சாதித்த குஜராத்! | IPL 2022: Umran Malik’s five-wicket haul ends up in a losing cause against Gujarat
ஐந்தாவது ஓவர் மீண்டும் ஷமி. ‘உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். ஓவர் முழுக்க நீ அடிப்பியாம். கடைசி பால் நான் விக்கெட் எடுப்பேனாம். ஓகே?’ என பேசிவைத்தது போல திரிபாதியை வெளுக்கவிட்டு கடைசி பாலில் பெலிவியனுக்கு அனுப்பினார். அபிஷேக் சர்மாவோடு ஜோடி சேர்ந்தார் மார்க்ரம். பூரண் விஞ்ஞானத்திற்கே வீம்பாய் சவால் விடக்கூடியவர். பால்வீதியையே தொட்டுவிட்ட அறிவியல் கணித சமன்பாடுகளால் பூரண் எந்த மேட்ச்சில் ரன் அடிப்பார் என்பதை மட்டும் இம்மியளவுகூட கணிக்க முடியாது. காயத்திலிருந்து மீண்டிருக்கும் சுந்தரின்…