Browsing: விளையாட்டு

`இது தமிழ்நாடு சார்!' – மிரண்டு போன வாசிம் அக்ரம்; நெகிழ்ந்த பாகிஸ்தான்; ஒரு வரலாற்று சம்பவம்

கிரிக்கெட்டும் இந்திய ரசிகர்களும் பிரித்தே பார்க்க முடியாத ஒன்று. இந்திய அணி மற்ற அணியோடு மோதும் போது இந்திய அணி வீரர்களும் அந்த எதிரணி வீரர்களுமே விளையாட்டில் பங்கேற்பார்கள். ஆனால், இந்தியா பாகிஸ்தானுடன் மோதும் போது மட்டுமே இந்திய வீரர்களுடன் இந்திய அரசியல்வாதிகளும் செலிப்ரிட்டிகளும் பாகிஸ்தான் வீரர்களுடன் பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் செலிப்ரிட்டிகளும் சேர்ந்து மோதிக்கொள்வர்.இந்தப் போக்கு மாறாத தொடர்கதையாக இருந்து வருகிறது. அவர்கள் மோதிக்கொள்ளட்டும். ஆனால், அதைச் சுற்றி பரப்பப்படும் ஒரு கட்டமைக்கப்பட்ட தேசியப்பற்றும் வெறுப்பரசியலுக்கும் இரு…

தொடரைச் சமன் செய்ய ‘தரமற்ற பிட்ச்’ கேட்டதா இந்திய அணி நிர்வாகம்? – வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிட்ச் தயாரிப்பாளர் | did indian team management ask for substandard pitch to level series

நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான லக்னோ பிட்ச் சென்னை – சேப்பாக்கம் பிட்சை விட பல மடங்கு தரமற்றதாக இருந்தது என்பது இப்போது சர்ச்சையாகியுள்ளது. உண்மையில் இந்தப் பிட்சிற்கு முன்னதாக வேறு இரண்டு பிட்ச்களைத்தான் பிட்ச் தயாரிப்பாளர் தயாரித்திருந்தார். ஆனால், அணி நிர்வாகத்திடமிருந்து கடைசி நேர ‘கோரிக்கை’ எழுந்ததால் சிகப்பு மண்ணாகக் காட்சியளித்த ஆட்டம் நடைபெற்ற அந்த பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் டி20 போட்டியில் தோல்வியுற்றதால் 2வது போட்டியில் எப்படியாவது வென்று தொடரை சமன் செய்ய…

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் ராஜினாமா… உலகக்கோப்பை தோல்வியால் முடிவு

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி காலிறுதிக்கு கூட முன்னேற முடியாத நிலையில் அவர் இந்த முடிவை இன்று அறிவித்திருக்கிறார். உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடந்து முடிந்துள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பெல்ஜியம் – ஜெர்மனி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த ஃபைனல் மேட்ச்சில் ஜெர்மனி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் நடப்பு சாம்பியனான பெல்ஜியம்…

சிக்ஸரே இல்லாத லக்னோ டி20 போட்டி – ஆடுகளத்தை சாடிய ஹர்திக், கம்பீர் | lucknow t20 match india new zealand ends without six hardik gambhir slams wicket

லக்னோ: இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ஒரு சிக்ஸர் கூட ஸ்கோர் செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீரும் ஆடுகளத்தை சாடியுள்ளனர். இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்தது. அதை விரட்டிய இந்திய அணி 19.5 ஓவர்கள் முடிவில் 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களே அதிகம்…

‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் க்ரீன் இடம்பெறுவார்’ – ஆஸி. பயிற்சியாளர் தகவல்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான கேமரூன் க்ரீன் இடம்பெறுவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்டு கூறியுள்ளார். இதுதொடர்பாக ஏ.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. இந்திய அணி வலுவாக இருக்கிறது. அதற்கு சவால் விடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் இருக்கும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின்போது கேமரூன் க்ரீனுக்கு காயம் ஏற்பட்டது. இதன்பின்னர் அவர்…

Sports Round Up: இந்திய அணிக்கு 5 கோடி பரிசு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஜோகோவிச் வரை! – Sports Vikatan’s Sports roundup 30.01.2023

சாதித்த இந்திய அணி!ஐசிசி 19 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. ஷெஃபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் முதன்முறையாக இந்திய அணி, ஐசிசி- ன் 19 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய டிடாஸ் சாது, சிறந்த வீரருக்கான விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நடாலும்…

மகா சேசிங், பவுமா சதம், மில்லர் விளாசல்… – இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா! | South Africa seal ODI series win against England after Bavuma’s stylish century

புளூம்ஃபாண்டெய்னில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 343 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டி 5 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா 102 பந்துகளில் 109 ரன்களையும், அய்டன் மார்க்ரம் 49 ரன்களையும் பின்னால் இறங்கிய மில்லர் 37 பந்துகளில் 58 ரன்களையும் விளாச தென் ஆப்பிரிக்கா அணி இலக்கை விரட்டத்…

டி20 போட்டியா? டெஸ்ட் போட்டியா?.. ஒரு சிக்சர் கூட இல்லாத நியூசி

நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வொயிட்-வாஷ் செய்த நிலையில், முதல் டி20 போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது.நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1…

Sports Round Up: சென்னையின் FC ஐ வீழ்த்திய பெங்களூரு முதல் நீரஜ் சோப்ராவின் கலந்துரையாடல் வரை!

இந்திய அணியைச் சந்தித்த நீரஜ் சோப்ரா! 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இப்போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்திய அணி வீராங்கனைகளை சந்தித்து கலந்துரையாடினார் என்று பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.Neerajஆலோசகர் மிதாலி ராஜ்!இந்த ஆண்டு மார்ச் மாதம் பெண்களுக்கான பிரிமியர் லீக் (…

ஆஸ்திரேலிய ஓபன் | 2022-ல் விளையாட தடை, 2023-ல் சாம்பியன்: ஜோகோவிச் சாதனை | banned in 2022 won champion title in 2023 australian open mens singles djokovic

மெல்பர்ன்: கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க செர்பியாவின் ஜோகோவிச்சுக்கு தடை விதித்தது ஆஸ்திரேலிய அரசு. நடப்பு ஆண்டில் அவர் அதே ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஒற்றையர் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இது வெறும் வெற்றி மட்டும் அல்ல. கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இதன் மூலம் பத்தாவது முறையாக அவர் சாம்பியன் ஆகியுள்ளார். 35 வயதான அவர் 2008, 2011, 2012, 2013, 2015, 2016,…

1 310 311 312 313 314 444