Browsing: விளையாட்டு

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை – ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, வருகின்ற 21-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.அதன்படி, 1,500,  2,000 மற்றும் 2,500 ரூபாய் டிக்கெட்டுகள்…

Dhoni: `காயங்கள் பிரச்சனைதான்…ஆனாலும் அந்த ஒரு விஷயம்…' – தோனி நம்பிக்கை!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூர்வின் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த போட்டிக்கான டாஸில் பெங்களூர் அணி வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. டாஸில் சென்னை அணியின் கேப்டன் முக்கியமான சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அவை இனி,Dhoni | தோனி“சின்னச்சாமி மைதானத்தில் ஸ்கோரை சேஸ் செய்யும் அணியைக் கட்டுப்படுத்துவது ரொம்பவே கடினம். பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். 180-200 ரன்கள் எடுப்பது சரியாக இருக்கும். ஆனாலும், ஒவ்வொரு 3-4 ஓவர்களுக்கும்…

‘பில்டிங் ஸ்ட்ராங்கு… பேஸ்மென்ட் வீக்கு!’ – ஐபிஎல் 2023 சீசனில் சோடை போன 5 வீரர்கள் | 5 players who have not performed well in ongoing IPL 2023

ஐபிஎல் 2023 தொடரில் இதுவரை பெரிய தலைகள் எதுவும் பெரிய ஸ்கோர்களை எட்டவில்லை, முதல் சதத்தையே சன் ரைசர்ஸின் இங்கிலாந்து அதிரடி மன்னர் ஹாரி புரூக்தான் எடுத்தார். மற்றபடி ஊடகங்களாலும், ஐபிஎல் மீடியா பார்ட்னர்களாலும் ஊதிப் பெருக்கப்பட்ட, பெருக்கி ஊதப்பட்ட வீரர்கள் பலர் சோடை போயுள்ளனர். இதில் முக்கியமாக, பில்ட் அப் ஸ்ட்ராங்கு, ஆனால் பேஸ்மென்ட் வீக் ஆன 5 வீரர்களைப் பார்ப்போம். ஊர்பேர் தெரியாத துப்புரவுப் பணி பின்னணி கொண்ட ரிங்கு சிங் 5 சிக்சர்களை…

கிரிக்கெட் வீரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. பரிசு தொகையை அதிரடியாக உயர்த்திய பிசிசிஐ…

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசுத் தொகையை பிசிசிஐ அதிரடியாக அதிகரித்துள்ளது.உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் பிசிசிஐ பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ரஞ்சி கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கான பரிசுத்தொகை 2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல, துலீப் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை 40 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விஜய் ஹசாரே கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை 30…

IPL 2023 Injured Players: `தோனிக்கு காலில் அடி; ரோஹித்துக்கு வயிற்றுவலி!' – யார் உள்ளே? யார் வெளியே?

சேப்பாக்கத்தில் நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளெம்மிங் பத்திரிகையாளர் சந்திப்பிற்காக வந்திருந்தார். அந்த சந்திப்பில் ஒரு நிருபர் ஃப்ளெம்மிங்கிடம் கேட்ட கேள்வி,`சென்னை அணியில் காயமடைந்த வீரர்களைப் பற்றிய அப்டேட் கொடுங்களேன்’ என்றார். அதற்கு, `காயங்களைப் பற்றியெல்லாம் பேசினால் ஒரு மணி நேரம் ஆகுமே! அவ்வளவு நேரம் உங்களிடம் இருக்கிறதா?’ எனக்கூறி ஃப்ளெம்மிங் அந்த அரங்கையே கலகலக்க வைத்திருந்தார். ஃப்ளெம்மிங் நகைச்சுவையாகப் பேசியிருந்தாலும் இந்த சீசனில் நாம் நிறைய…

IPL 2023: GT vs RR | சஞ்சு சாம்சன் – ஹெட்மேயர் அதிரடியால் 4வது வெற்றியை ருசித்த ராஜஸ்தான்

குஜராத்: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுளளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 2வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. நன்றி

ஹெட்மையர் அதிரடி அரைச்சதம்… கடைசி ஓவரில் குஜராத்தை வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். அகமதாபத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை முதலில் தேர்வுசெய்தார். இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமன் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். சாஹா 4 ரன்னில் வெளியேற…

IPL 2023 | தொடர்ச்சியாக 5 போட்டிகளில் டெல்லி தோல்வி: ரிக்கி பாண்டிங்கை சாடிய சேவாக் | dc faces 5 defeats virender sehwag slams ricky ponting

Last Updated : 16 Apr, 2023 01:05 PM Published : 16 Apr 2023 01:05 PM Last Updated : 16 Apr 2023 01:05 PM சேவாக் மற்றும் பாண்டிங் | கோப்புப்படம் டெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி இருப்பதற்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்தான் பொறுப்பு என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்…

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக கேப்டன் ராகுல், கைல் மேயர்ஸ் களத்தில் இறங்கினர். 29 ரன்கள் சேர்த்த போது மேயர்ஸ் ஆட்டமிழந்தார்.…

1 274 275 276 277 278 444