CSK vs SRH: `சேப்பாக்கில் சொதப்புவது எப்படி?’ – பாடமெடுத்த சன்ரைசர்ஸ்; கூலாக வென்ற சி.எஸ்.கே! – IPL 2023: CSK vs SRH Match Report
‘சென்னை அணியின் சமூகவலைதள பக்கங்களை ஃபாலோ செய்பவர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கக்கூடும். அவர்கள் எப்போதுமே சேப்பாக்கம் மைதானத்தை ‘AnbuDen’என்றே குறிப்பிடுவார்கள். ‘Den’ என்றால் ‘குகை’. சிங்கத்தின் குகையென சேப்பாக்கத்தை அந்த அணி வர்ணிக்கும். சிங்கத்தின் குகையில் அதன் எஜமானரான சிங்கத்தை வீழ்த்துவது அத்தனை எளிதான காரியமல்ல. ஒரு வெறித்தனமான சென்னை ரசிகனை அழைத்து சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியைப் பற்றி ஒரு பத்தி எழுதிக் கொடுக்கச் சொன்னால் இப்படித்தான் அந்த ரசிகன் எழுதியிருக்கக்கூடும். ஆம், இத்தனை பில்டபுக்கும் ஏற்றவகையில்தான்…









