Browsing: விளையாட்டு

IPL 2023 ; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை வான்கிடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்  6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும். ஜோஸ் பட்லர் 18 ரன்களும் கேப்டன் சஞ்சு…

CSKvPBKS : பெவிலியனிலிருந்து மெசேஜ்; அம்பயருடன் உரையாடல்; கடைசி பந்தில் பலே திட்டம்! – CSKvPBKS : Punjab’s Plan to defeat CSK in last ball

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. கடைசிப் பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. பதிரனா வீசிய கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. திறம்பட பந்துவீசிய பதிரனா முதல் 5 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆக, கடைசிப் பந்தில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் சிக்கந்தர் ராசாவும்…

ஃபகர் ஜமானின் காட்டடி 180 நாட் அவுட்: பாகிஸ்தானின் 2-வது சாதனை சேசிங்!

ராவல்பிண்டியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 336 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி அனாயசமாக விரட்டி 337/3 என்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது பாகிஸ்தான் அணியின் 2-வது பெரிய வெற்றிகர சேஸிங் ஆகும். நியூஸிலாந்து அணி எடுத்த 336 ரன்கள் பாகிஸ்தான் மண்ணில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். நியூஸிலாந்தின் டேரல் மிட்செல் 119 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசி 129 ரன்கள் எடுத்தார். கேப்டன் டாம்…

களமிறங்குவாரா பென் ஸ்டோக்ஸ்? சென்னை அணிக்கு இதுதான் இருக்கும் வாய்ப்பு!

ஐபிஎல் தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சென்னை – பஞ்சாப் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள சென்னை அணிக்கும், 6வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணிக்கும் இன்றைய போட்டி முக்கியம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை கேப்டன் ஷிகர்…

IPL 2023 Daily Round Up: ரோஹித்தின் 10 வருட கொண்டாட்டம் முதல் வங்கதேசம் கிளம்பிய லிட்டன் தாஸ் வரை!

நாடு திரும்பிய லிட்டன் தாஸ்:வங்கதேச அணி வீரரான லிட்டன் தாஸ், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தனது சொந்த நாடான வங்கதேசத்திற்குச் சென்றுள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. “லிட்டன் தாஸ் குடும்பத்தில் ஏற்பட்ட அவசர மருத்துவச் சூழல் காரணமாக நாட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்தக் கடினமான நேரத்தைக் கடக்க அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துகள்” என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் இந்த ஐபிஎல் தொடரின்…

‘இந்திய அணியில் ரின்கு சிங் இடம் பிடிப்பார்’ – டேவிட் ஹஸி நம்பிக்கை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடும் ரின்கு சிங் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டேவிட் ஹஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த 9 ஆம் தேதி நடந்த போட்டியின்போது கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளிலும்5 சிக்சர் அடித்து ரின்கு சிங் கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார். இந்த நிகழ்வு சர்வதேச அளவில் ரின்கு சிங் மீது கவனத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட் ஜாம்பவான்கள்…

PBKS vs LSG: 12-க்குக் குறைந்திடாத ரன்ரேட்; வேறு முகம் காட்டி மிரட்டிய லக்னோ, பதுங்கிய பஞ்சாப்!

லக்னோவின் ஸ்லோ பிட்சில் டேக் ஆஃப் ஆகவே தடுமாறும் லக்னோவின் பேட்டிங் யூனிட், மொகாலியில் தார்ரோட்டுக்கு இணையான பேட்டிங் பிட்ச் கிடைக்க, அங்கே உக்கிரமாக உருவெடுத்ததோடு பஞ்சாப்பையும் வீழ்த்தியுள்ளது.முரண்களின் பின்னல்தானே வாழ்க்கை. அதை விளக்குவதைப் போன்றே இயல்பு மாறிச் சிரிக்கும் கம்பீரையும், டென்ஷனை முகத்தில் காட்டும் தவானையும் இப்போட்டி காட்சிப்படுத்தியது. பந்துகளை உருட்டி விளையாடியே பழக்கப்பட்ட லக்னோவோ கொலைப்பசியோடு ரன்களைக் குவித்து ஐ.பி.எல் வரலாற்றின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவேற்றியது. இந்த சீசனில் முந்தைய மோதலில் பஞ்சாப்பிடம்…

ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி ஏன்? – சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம் | csk skipper dhoni explains reason for the defeat against rr

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவர்பிளேவில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததே தோல்விக்கு காரணம் என சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்தார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 203 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது. இந்த…

பேட்டிங்கில் ருத்ரதாண்டவம்- பஞ்சாப்பை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ

ஐ.பி.எல் 2023 தொடரின் 38-வது போட்டியில் லக்னோவும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும், மேயர்ஸ்ஸும் களமிறங்கினர். ராகுல் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனையடுத்து பதோனி களமிறங்கினார். மேயர்ஸ், பதோனி ஜோடி அதிரடியாக ஆடியது. மேயர்ஸ் 24 பந்துகளில் 54 ரன்களும், பதோனி 24 பந்துகளில் 43 ரன்களும் குவித்தனர்.அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ் பஞ்சாப் அணியின்…

1 268 269 270 271 272 444