Browsing: விளையாட்டு

ஆஸி. மீண்டும் ‘கொலாப்ஸ்’ – இலக்கை விரட்டி வெல்ல தென் ஆப்பிரிக்கா நம்பிக்கை! | Aussies collapse again South Africa hopeful of chasing down target wtc final

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா என இரு அணியின் பேட்டிங்கும் தடுமாறுகின்றன. ஆனால், ஆஸ்திரேலியாவின் அனுபவ வீரர்கள் அந்த அணியை வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். 250 ரன்களை சேஸ் செய்து விடலாம் என்று தென் ஆப்பிரிக்கா வீரர்கள் நம்புகின்றனர். ஆனால், முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்காவின் அதிக ஸ்கோரை எட்டியவரான டேவிட் பெடிங்கம் ஆஸ்திரேலியா என்ன இலக்கு நிர்ணயித்தாலும் வெல்வோம்…

TNPL: சாய் சுதர்சன் ஆப்சன்ட்.. தொடர்ந்து சொதப்பும் கோவை அணி; மதுரைக்கு வெற்றி !TNPL Sai Sudarashan

இதனால் மதுரை அணி 17.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அரவிந்த் 68 ரன்களும், அதிரடியாக விளையாடி மதுரை கேப்டன் சதுர்வேத் 23 பந்துகளில் 46 ரன்களும் சேகரித்தனர். இந்த சீஸனில் முதல் வெற்றியை மதுரை பதிவு செய்துள்ளது. சிறப்பாக ஆடிய அரவிந்த் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.மதுரை அணி அரவிந்த்டிஎன்பிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக கருதப்படும் கோவை அணி இந்த சீஸனில் விளையாடிய 2 போட்டிகளிலும்…

திருச்சி சோழாஸ் அணியை வீழ்த்தியது சேலம் @ டிஎன்பிஎல் | salem team beats trichy in tnpl t20 league

கோவை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேலம் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 58 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்களும், சன்னி சாந்து 27 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 45 ரன்களும் விளாசினர். திருச்சி அணி தரப்பில் அதிசராஜ்…

IND vs ENG; gill; gautam gambhir; இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் மூன்று அனுபவ வீரர்கள் இல்லாதது அரிய வாய்ப்பு என இந்திய வீரர்களிடம் கம்பீர் கூறியிருக்கிறார்.

புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய இளம் படை ஜூன் 20-ம் தேதி முதல் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.ரோஹித், கோலி, அஸ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதால், அவர்களின் வெற்றிடம் நிச்சயம் இந்திய அணியில் வெளிப்படக்கூடும்.குறிப்பாக, கோலியின் இடத்தை யார் நிரப்பப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்த டெஸ்ட் தொடரை இரண்டு கண்ணோட்டத்தில் பார்க்கலாம் எனக்…

நானாக இருந்தால் விராட் கோலியிடம் கேப்டன்சியைக் கொடுத்திருப்பேன்: ரவி சாஸ்திரி | If it were me, I would have given the captaincy to Virat Kohli – Ravi Shastri

விராட் கோலி ஓய்வு பெற்றது குறித்து ரவி சாஸ்திரி கருத்துக் கூறிய போது, முடிவு எடுக்கும் அதிகாரத்தில் நான் இருந்திருந்தால், ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகே விராட் கோலியிடம் கேப்டன்சியிடம் கொடுத்திருப்பேன் என்று கூறியுள்ளார். ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த பிறகு விராட் கோலியிடம் கேப்டன்சி அளித்திருக்க வேண்டும் என்று பலரும் அபிப்ராயப் பட்டனர். விராட் கோலியும் இங்கிலாந்து தொடரில் தன்னிடம் கேப்டன்சி கொடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரலாம் என்று நினைத்திருந்ததாகவே செய்திகள் வெளியாகின. ஆனால்…

Virat Kohli – Ravi shastri: விராட் கோலி டெஸ்ட் ஓய்வு; ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி சமீபத்தில் ஓய்வை அறிவித்திருந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் திடீர் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விராட் கோலிஇந்நிலையில் விராட் கோலியின் ஓய்வு குறித்துப் பேசிய இந்திய முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, “விராட் கோலி ஓய்வு பெற்ற முறையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.நான் அந்த இடத்திலிருந்திருந்தால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவரை கேப்டனாக அறிவித்திருப்பேன்.அவரது…

தென் ஆப்பிரிக்காவிடம் ஆஸி. சுருண்டதில் வியப்பு ஏதுமில்லை… ஏன்? | No wonder that australia crushed by South Africa explained

லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு ஆஸ்திரேலியாவை 212 ரன்களுக்குச் சுருட்டியதில் ஆச்சரியமொன்றுமில்லை, ஏனெனில் இதற்கு முதல் தொடரில் பும்ரா அண்ட் கோ ஆஸ்திரேலிய பேட்டிங்கை கலங்கடித்ததனால் ஆஸ்திரேலிய பேட்டிங் பலவீனங்கள் வெட்ட வெளிச்சமாகியது. ஆனால், தென் ஆப்பிரிக்கா பேட்டிங் சரிவுக்கு ஆஸ்திரேலியாவின் துல்லிய பவுலிங் மட்டும் காரணமல்ல. ஐசிசி ஃபியூச்சர் டூர் புரொகிராம் என்னும் ஷெட்யூலில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே அதிக…

virat kohli; anushka sharma; Shahid Afridi; பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான சாகித் அப்ரிடி, விராட் கோலிக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

டெலிகாம் ஆசியா ஸ்போர்ட் ஊடகத்திடம் பேசிய அப்ரிடி, “கோலியைப் பற்றி நிறைய கூறலாம். அவர் மிகவும் தீவிரமானவர்.சில நேரங்களில் சர்ச்சைக்குரியவர். எதுவாக இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் செய்ததை யாராலும் மறுக்க முடியாது.தனது அணிக்காக அனைத்தையும் அவர் செய்தார். தனியாளாகப் போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார்.சாகித் அப்ரிடிஅவரைப் போன்றவர்கள் மிகவும் அரிதானவர்கள். முன்பு அவர் மிக ஆக்ரோஷமாக இருப்பார்.ஓருமுறை சுனில் கவாஸ்கர் கூட, அவரை கட்டுப்படுத்துமாறு பிசிசிஐ-யிடம் கேட்டது நியாபகமிருக்கிறது.ஆனால், திருமணத்துக்குப் பிறகு கோலி நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறார். அதிகப்படியான…

கடைசி டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி! | England win the last T20 match versus west indies

சவுத்தாம்ப்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. சவுத்தாம்ப்டனில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 3 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 46 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், ஜேமி ஸ்மித் 26 பந்துகளில், 5 சிக்ஸர்கள்,…

Retired : திடீரென ஓய்வை அறிவித்த நிக்கோலஸ் பூரான்… 2025ல் ஓய்வு பெற்ற முக்கிய வீரர்கள் யார் யார்?

தற்போது நடைபெறும் இங்கிலாந்து மற்றும் அடுத்து வரும் அயர்லாந்து தொடருக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், முழுவதுமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நிக்கோலஸ் பூரான் மட்டுமல்ல, இந்த ஆண்டில் பல கிரிக்கெட் ஜாம்போவான்கள் தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். 1. ஸ்டீவ் ஸ்மித்ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியைத் தழுவிய பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஸ்டீவ் ஸ்மித் 2.…

1 24 25 26 27 28 357