தமிழக வீரர்கள் பாபா, சித்தார்த் சதம்
முதலில் விளையாடிய தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 81.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் பாலசுப்பிரமணியம் சச்சின் 2, என்.ஜெகதீசன் 8, பிரதோஷ் ரஞ்சன் பால் 2, பி.வித்யுத் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித்தும், ஆந்த்ரே சித்தார்த்தும் அபாரமாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தனர்.38-வது ஓவரின் போது தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள்…









