Browsing: விளையாட்டு

IND vs PAK: குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட ஹர்திக்| Angry Hardik Pandya, Suryakumar Yadav Scold Kuldeep Yadav

கையில் வந்து விழுந்த பந்தை அவர் தவறவிட்டதோடு, அது எல்லைக்கோட்டைத் தாண்டி சிக்ஸருக்கும் சென்றது. இதைப் பார்த்த ஹர்திக் பாண்டியா மைதானத்தில் தனது நிதானத்தை இழந்து குல்தீப்பிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தியா வெற்றி பெற்ற பிறகும் ஹர்திக் பாண்டியாவின் கோபம் தணியவில்லை. ஹர்திக் பாண்டியா – குல்தீப் யாதவ் வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ளும் நேரத்திலும் ஹர்திக் பாண்டியா மீண்டும் குல்தீப் யாதவிடம் சென்று ஆவேசமாகப் பேசும் வீடியோ தான் இணையத்தில்…

“இன்றைக்கு நான் எட்டியிருக்கும் இடத்திற்கு தேவையான அனைத்தையும் எனக்கு வழங்கிய இடம் இதுதான்”- டிராவிட் நெகிழ்ச்சி| “This is the place that has given me everything I needed to reach where I am today,” — Dravid

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தின் ஒரு ஸ்டாண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசியிருக்கும் ராகுல் டிராவிட், “சின்னசாமி மைதானம் என்னுடைய இரண்டாவது வீடு போன்றது. நானும் அனில் கும்ப்ளேவும் எங்கள் வீடுகளில் அதிக நேரத்தை செலவிட்டதை விட இந்த மைதானத்தில் தான் அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறோம். பெங்களூரு சின்னசாமி மைதானம் இந்த இடம் சில சமயங்களில் எனக்கு மகிழ்ச்சியையும், சில சமயங்களில் ஏமாற்றங்களையும் தந்திருக்கிறது. ஆனால்…

T20 WC: ஆஸ்திரேலியா ஆல் அவுட்; சம்பவம் செய்த ஜிம்பாப்வே! – கொழும்புவில் என்ன நடந்தது?

கொழும்புவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்திருக்கிறது ஜிம்பாப்வே அணி.Zimbabweடாஸை ஆஸ்திரேலிய அணியே வென்றிருந்தது. முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தது. கொழும்பு மைதானம் கொஞ்சம் மெதுவான மைதானம். சராசரி ஸ்கோரே 150-160 க்குள்ளாகத்தான் இருக்கும். இதை புரிந்து வைத்துக் கொண்டு ஜிம்பாப்வே அணி கால்குலேட்டிவாக ஆடியிருந்தது. பென்னட்டும் மருமணியும் ஓப்பனர்கள்.160 மார்க்கை எட்டினால் போதும் என்கிற மனநிலையில் நிதானமாக ஆடினர். பவர்ப்ளேக்குள் ஆஸ்திரேலிய அணி வார்சூயிஸ், மேக்ஸ்வெல், நேதன் எல்லீஸ் என 5 பௌலர்களை பயன்படுத்தியது. ஆனாலும்…

ஜடேஜா, ஜெய்ஸ்வால் இல்லை! – புதிய கேப்டன் ரியான் பராக்! – அறிவிப்பை வெளியிட்ட RR | IPL Rajastan royals team announces its new captain

ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், Rajasthan Royals அணி இன்று தங்களின் புதிய கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இளம் ஆல்ரவுண்டர் ரியான் பராக் (Riyan Parag) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.டிசம்பர் மாதம் நடைபெற்ற டிரேடிங் செயல்பாடுகளில், ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் (Sanju Samson) சென்னை அணிக்கு சென்றதும், சென்னை அணியின் அனுபவ வீரர் ஜடேஜா (Ravindra Jadeja) ராஜஸ்தான் அணியில் இணைந்ததும் பெரும் கவனத்தை ஈர்த்தது.…

'தீப்பொறியாக நமீபியா; ஊதி அணைத்த மென் இன் ப்ளூ! – எப்படி வென்றது இந்தியா?

உலகக்கோப்பைப் போட்டிகளின் முதல் சுற்றில் இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு பெரும்பாலும் சிக்கல் இருக்காது. ஆனால், இந்த உலகக்கோப்பையில் சின்னச்சின்ன அணிகளெல்லாம் சிறப்பாக ஆடுகின்றன. அதனால் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு ஏதேனும் சவால் இருக்குமோ என்று தோன்றியது. ஆனால், ஒரு சில ஓவர்களுக்கு நமீபியா பயம் காட்டியதே தவிர இந்திய அணி பெரிய சிரமம் ஏதுமின்றி வென்றிருக்கிறது.Ind vs Namடெல்லி பேட்டிங் பிட்ச் என்பதால் எவ்வளவு பெரிய டார்கெட்டையும் சேஸ் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு…

T20 WC: ‘இந்திய அணிக்கு மட்டும் வாய்ப்பு, எங்களுக்கு?’- அதிருப்தியை வெளிப்படுத்திய நமீபியா கேப்டன்| t20-world-cup-namibia-captain-questions-practice-opportunity-given-only-to-india

டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, நமீபியா அணிக்கு இரவுநேரப் பயிற்சி வழங்கப்படாதது குறித்து அதன் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். 10வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (பிப்.12) நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை, நமீபியா எதிர்கொள்கிறது. இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக நமீபியா அணியின் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர்,…

“அதுதான் அவரின் வழக்கமான ஆக்ஷன்” – உஸ்மான் டரிக் பந்துவீச்சு குறித்து அஷ்வின் | That is his regular action” – Ashwin on Usman Tariq’s bowling action.

கொழும்புவில் நடைபெற்ற அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், உஸ்மான் டரிக் பந்துவீசிய விதம், தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. பேசுப்பொருளான உஸ்மான் டரிக் பந்துவீச்சு உஸ்மான் டரிக், பந்துவீச வரும்போது, பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன், இரண்டு நொடிகள் வரை நின்றுவிட்டு பிறகு பந்துவீசுவார். மேலும், அவரது கை ஆக்‌ஷன், மற்ற பௌலர்களைப் போல இல்லாமல், சற்று வித்தியாசமாக இருக்கும். கேதர் ஜாதவைப் போல பந்துவீசுவார். ஆனால், அப்படி பந்துவீசும்போது, உஸ்மான் டரிக்கின் கை, நேராக இல்லாமல், சற்று…

CSK: சிஎஸ்கே அணியுடன் கைகோக்கும் ஸ்கைபேக்ஸ் – இளைஞர்களைச் சென்றடைய எடுத்த முடிவு!

ஐபிஎல் 2026 சீஸனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் பிரபல லக்கேஜ் பிராண்டான ஸ்கைபேக்ஸ் அதிகாரபூர்வ கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், வரும் சீஸனில் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக ஸ்கைபேக்ஸ் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கான அறிவிப்பை விஐபி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சிஎஸ்கே அணி நிர்வாகமும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விஐபி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி & தலைமை நிர்வாக அதிகாரி அதுல் ஜெயின் மற்றும் சென்னை சூப்பர்…

தொழிலதிபரைக் கரம்பிடிக்கும் சச்சின் டெண்டுல்கர் மகன்! – யார் இந்த சானியா சந்தோக்?

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், இளம் தொழிலதிபர் சானியா சந்தோக்-குக்கும், மும்பையில் அடுத்த (மார்ச்)மாதம் 5 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அடுத்த மாதம் 3 ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற உள்ளன.பிரதமருக்கு திருமண அழைப்பு தனது மகன் திருமண விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் நேரில் சென்று அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த வருடம் அர்ஜுன்…

T20 World Cup: AFG vs SA: 6,6,6 இரண்டு சூப்பர் ஓவர்கள்… SA-வை பதற வைத்த AFG!

டி20 உலகக் கோப்பையின் 13-வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்களை நாற்காலியின் நுனியில் அமர வைத்த பரபரப்பான திரில்லராக மாறியது.தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இந்தப் போட்டி, டி20 வரலாற்றிலேயே அரிதாக காணப்படும் இரண்டு சூப்பர் ஓவர்களுடன் முடிவடைந்து பேசுபொருளாகி உள்ளது.டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குவிண்டன் டி கொக் மற்றும் மார்க்ரம் தொடக்க…

1 15 16 17 18 19 442