Browsing: சமையல் | Recipes

ப்ளவர்ஸ் அல்வா, பாரம்பர்ய சிறுதானிய உணவுகள்… சேலத்தில் அசத்திய அவள் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி! | Foods, `AVAL Cooking Superstar Competition’ held in Salem!

சேலத்தில் சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சார்பில் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-2 நிகழ்ச்சி சௌடேஷ்வரி மகளிர் கல்லூரியில்  இன்று நடைபெற்றது. இதில், நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக செஃப் தீனா கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சி ஸ்பான்சர்ஸ், சௌடேஸ்வரி கல்லூரி நிர்வாகத்தினர் கலந்துகொண்டு போட்டியாளர்களை வரவேற்று பேசினர். அவள் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிஇந்த போட்டியில் 100 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தங்களது உறவினர்கள், தாய், மகன், அக்கா, சகோதரன் ஆகியோர் எப்படி சமைக்கிறார்கள் என்பதை பார்க்க…

இன்புளி வெஞ்சோறு, வாழை இலை அல்வா, கருப்பு கவுனி பிரௌனி; கோவையில் கமகமத்த அவள் சமையல் சூப்பர் ஸ்டார்!

அவள் விகடன் நடத்தும் ‘சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2’ பிரமாண்டமாக நடந்து வருகிறது. கடந்தாண்டு 11 மாவட்டங்களில் நடந்த இந்தப் போட்டி, இம்முறை 13 மாவட்டங்களில் நடைபெறுகிறது. மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து இன்று (15/02/2025) கோவையில் இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றுள்ளனர். கோவை மட்டுமல்லாமல் திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும்…

Health: தெரியாத கீரை; ஆனால், சாப்பிட வேண்டிய கீரை அது… ஏன் தெரியுமா? | list of health benefits of Sukkan keerai

சுக்கான் கீரையை அலசி, மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால், பித்தம் குறையும். கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலைக்கு மிகச் சிறந்த மருந்து. கால்சியம் அதிகம் இருப்பதால், மதிய உணவில் பொரியலாகச் சேர்த்துக் கொள்ளலாம். வயதாவதால் ஏற்படும் எலும்புத் தேய்மானம், மூட்டுவலியைத் தடுக்கலாம்.சுக்கான் கீரையுடன் ஏதாவது ஒரு பருப்பு சேர்த்துக் கூட்டுச் செய்து சாப்பிட்டு வந்தால், நெஞ்செரிச்சல் நீங்கும். நன்றி

பெண்களை முந்திய ஆண் போட்டியாளர் – வேலூரில் கலக்கிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி! | aval vikatan – samayal super star contest – vellore

இரண்டாவது சுற்றில் `லைவ் குக்கிங்’ செய்யப்பட்டது. பனீர் மசாலா, முட்டையுடன் சிக்கன் பிரியாணி, பனீர் 65, கோதுமை சம்பா சாம்பார், பனீர் தவா ஃபிரை, மாங்காய் பச்சடி, சாமை பனை வெல்லம், கொங்கு நாட்டு வெள்ளை குஷ்கா, வரகு அரிசி சிக்கன் பிரியாணி, பனீர் பரோட்டா, பனீர் வெஜ் குருமா என வகை வகையான ரெசிபிகளை செய்து அசத்தியிருந்தனர். கடும் போட்டி நிலவிய சூழலில், இறுதிப் போட்டிக்கு பவித்ரா, பர்மிளா, பிரவீன், மாலதி ஆகிய 4 பேரைத்…

கவுனி அரசி கைமா கஞ்சி, குதிரைவாலி சாக்லேட் பொங்கல்… வேலூரில் கமகமத்த சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி | aval vikatan – samaiyal super star contest – vellore

அரங்கம் கமகமக்க… நாவூறும் சுவையிலான அரிசி நொய் உப்புமா, தயிர் சட்னி, பழைய அமுது, திருக்கை மீன் குழம்பு, சுறா புட்டு, முளைப் பயறு சோளம் சுண்டல், ஆடு தொடா இலை டீ, மோர்க்களி, காலி ஃபிளவர் பாயா, மிளகு மஞ்சள் பால், பாசிப் பருப்பு லட்டு, முசுமுசுக்கை இலை அடை, மிளகு அடை, விறால் மீன் குழம்பு, ராகி சந்தைக் களி, திணையில் செய்த கட்லட், குதிரைவாலி சாக்லேட் பொங்கல், மட்டன் நல்லி, மட்டன் குழம்பு,…

புதுச்சேரி: அரங்கில் அணிவகுத்த பரம்பர்ய உணவுகள் – சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் முந்திய 3 ராணிகள் | In Puducherry 3 women were selected as top 3 in Aval vikatan cooking Super Star competition

பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழியாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் இணைந்து தமிழகம் முழுக்க சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தற்போது நடைபெறும் இரண்டாவது சீசனின் 7-வது போட்டி புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குறிப்பாக புதுச்சேரி நகரப் பகுதி மட்டுமல்லாமல் காலாப்பட்டு,…

புதுச்சேரி: வெற்றிலை லட்டு… சோற்றுக் கற்றாழை பாயசம்… களைகட்டும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் – 2

சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன், `சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் – 2’ ஆரம்பமாகி விட்டது. வாசகர்களின் கைப்பக்குவத்துக்குப் பாராட்டும், பரிசும் தரும் இந்த மாபெரும் சமையல் போட்டி, தமிழகம் முழுக்க 13 ஊர்களில் நடக்கவிருக்கிறது. இதன் மெகா இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறும்.முதல் போட்டி மதுரையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாவது போட்டி தஞ்சாவூரிலும், மூன்றாவது போட்டி திருச்சியிலும், நான்காவது போட்டி ராமநாதபுரத்திலும், ஐந்தாவது போட்டி காரைக்குடியிலும் ஆறாவது போட்டி விழுப்புரத்திலும் நடைபெற்ற நிலையில்,…

பறவை கூடு சூப்; உலகிலேயே காஸ்ட்லி; பருக ஆர்வம் காட்டும் மக்கள்; என்ன காரணம்? | Bird’s Nest Soup Is One Of Most Expensive Dishes In The World, Here’s Why

இந்த சூப் பல்வேறு நன்மைகளை வழங்குவதாக சீன மக்கள் நம்புகின்றனர். இந்த சூப்பின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும், இது சரும பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் எனவும் சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் ஆஸ்துமா அல்லது நாள்பட்ட இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளைப் போக்கவும், பசியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுவதாக சீன மக்கள் நம்புகின்றனர். இதனைப்…

Dates: பேரீச்சம் காய், பாய், பழம்… ஆரோக்கிய பலன்கள் என்னென்ன..? | Date health benefits: Protects the heart -Siddha doctor explain

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், ரத்தக்குழாய்கள் வலுப்பெற்று, ரத்த அழுத்தம் சீராகும். அனீமியா என்ற ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள், பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், விரைவில் குணம் பெறலாம். மேலும் உடலில் ரத்தம் குறைந்தவர்களுக்கு, ரத்த விருத்தி செய்ய உதவுகிறது. உடல் மெலிந்தவர்கள் பேரீச்சம்பழத்தை உண்பதால், நல்ல பொலிவான தேகம் பெறலாம். மாரடைப்பு உள்ளவர்களுக்கு, பேரீச்சம்பழம் மிகவும் நல்லது. இதயத்தசை வலுப்பெற உதவும். ஏற்கெனவே பருமனான தேகம் உடையவர்கள் மற்றும் நீண்ட நாள் செரிமானப் பிரச்னை…

Apple: ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் ஆப்பிள்கள்தான் தரமானதா? அதிக விலைக்கு வாங்கும் மக்கள்; உண்மை என்ன?

பொதுவாக பழக்கடைகளில் அல்லது சந்தைகளில் ஆப்பிள் அல்லது சில பழங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள்கள் தான் தரம் வாய்ந்தது என்று எண்ணி அதனை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள்.உண்மையில் எதற்காக அவ்வாறு ஆப்பிளில் ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுகிறது என்பது குறித்து 99 சதவிகிதம் பேருக்குத் தெரியாது. ஆப்பிள் மட்டுமல்ல, ஆரஞ்சுகளும் இப்போது ஸ்டிக்கர்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டிக்கர்களுடன் கூடிய பளபளப்பான ஆப்பிள்களைப் பார்க்கும் பெரும்பாலான மக்கள் அவை தரம் உயர்ந்தவை…