திருச்சி: `7 வயது சிறுவன் டு 80 வயது பாட்டி..!’ – களைகட்டிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் | trichy aval vikatan samayal super star
இந்த போட்டியில், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, ஈரோடு, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், காரைக்குடி, காரைக்கால் என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியாளர்கள் தாங்கள் சமைத்துக் கொண்டுவந்திருந்த உணவை காட்சிப்படுத்தினர். எல்லா போட்டியாளர்களும் பார்வைக்கு வைத்திருந்த உணவுகளை செஃப் தீனா சுவைத்துப் பார்த்து, அவற்றில் சிறந்த உணவை செய்த பத்து பேரை தேர்ந்தெடுத்தார். அவர்கள் பத்து பேர்களில் இருந்து சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்பவர்களை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு தனியாக போட்டி வைக்கப்பட்டது.…