மதிப்பெண்களைக் குவித்த ‘கீனோ’ | Keeno a Tamil movie scores highest on IMDB
பதின்ம வயதுச் சிறார்களின் உளவியல் சிக்கல்களில் முதன்மையானது தனிமை. அது டீன் பிள்ளைகளிடம் உருவாக்கும் சிக்கல்கள் பற்றி பெற்றோருக்கு எந்த விழிப்புணர்வும் எப்போதும் இருந்ததில்லை என்றே சொல்லலாம். பேயை வைத்து மூடநம்பிக்கை வளர்த்துப் பணம் பார்ப்பவர்கள் பெருகிக் கிடக்கும் தமிழ் சினிமாவில், ஒரு ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகக் கடந்த மே மாதம் வெளியாகி, வந்த சுவடே தெரியாமல்போனது ‘கீனோ’. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கு டீன் பருவத்தினருக்கும் விழிப்புணர்வு ஊட்டிய இப்படத்தில், ‘வெற்றிடம்’, ‘நெகடிவ் ஸ்பேஸ்’, ‘பாசிடிவ் மாடுலேட்டர்ஸ்’, ‘கீனோபோபியா’…