Browsing: அரசியல்

அதிமுக ஆட்சி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த ஓபிஎஸ் வீட்டில்தான் சோதனை நடத்த வேண்டும்: மாஜி அமைச்சர் உதயக்குமார் பாய்ச்சல்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பு அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் உதயக்குமார் அளித்த பேட்டி: அதிமுக தொண்டர்கள் என்ற போர்வையில் குண்டர்களை கூட்டிக் கொண்டு அதிமுக அலுவலகத்தை துவம்சம் செய்த ஓ.பன்னீர்செல்வம் எத்தனை முறை காசிக்கு சென்றாலும் பாவம் தீராது. அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்று அவருக்கு தெரியும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் சோதனை…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படாத நிலையில் ஜே.பி.நட்டாவின் பேச்சால் சர்ச்சை

சிவகங்கை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படாத நிலையில் ஜே.பி.நட்டாவின் பேச்சால் சர்ச்சை கிளப்பியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95% முடிந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா நேற்று தெரிவித்திருந்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சாலை, சுற்றுச்சுவரை தவிர எந்த கட்டுமான பணிகளும் தொடங்கவில்லை.   Source link

காங்கிரசுடன் கூட்டணி மம்தாவுடன் பேசி விட்டே பவார் சொல்லி இருப்பார்: திரிணாமுல் காங்கிரஸ் கருத்து

கொல்கத்தா: ‘மம்தா பானர்ஜியுடன் பேசிய பிறகே காங்கிரசுடன் கூட்டணி அமைக்க  திரிணாமுல் காங்கிரஸ் தயார் என்று சரத் பவார் அறிவிப்பு வெளியிட்டு இருக்கலாம்,’ என்று திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கடந்த கால கசப்பான அனுபவங்களை கைவிட்டு, 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நலனுக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறார். அவர் தனது கடந்த…

சொல்லிட்டாங்க…

* காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே. இது அனைவருக்கும் பொருந்தும்.- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி*எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அடுத்த மக்களவை தேர்தலில் பாஜவை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும்.- ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்*தமிழகத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் கலவர நெருப்பை பற்ற வைக்கும் வகையில் பாஜ செயல்படுகிறது.- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* புதுவை ஜிப்மரில் நிலவும் மருந்து தட்டுப்பாடு லட்சக்கணக்கான ஏழை குடும்பங்களை…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்.24ல் தொடக்கம்

டெல்லி: அக்டோபர் 17ல் நடைபெறவுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்.24 முதல் 30 வரை நடைபெறும் என அறிவித்தது. அக்டோபர் 17ல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. Source link

எல்லாபுரம் ஒன்றியத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி: சசிகலா பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா நேற்று கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட எல்லாபுரம் ஒன்றியம்  கன்னிகைப்பேர்,  பெரியபாளையம், தண்டலம்,  பாலவாக்கம்,  ஊத்துக்கோட்டை பகுதிகளில் மக்கள் சந்திப்பு  நிகழ்ச்சி நடத்தினார். இதற்கு எல்லாபுரம் எல்.ரஜினி தலைமை தாங்கினார். தமிழக அரசின் முன்னாள் கொறடா பி.எம்.நரசிம்மன் முன்னிலை வகித்தார்.மக்கள் சந்திப்பில் சசிகலா பேசியதாவது;தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் பெண் சிசு கொலை தடுக்க தொட்டில் குழந்தை திட்டம்,  அம்மா உணவகம்,  தாலிக்கு தங்கம்,  மாணவர்களுக்கு லேப்டாப்  போன்ற…

அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன்

சென்னை: அதிமுக அலுவலகம் முன்பு ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள்…

மிரட்டல் பேச்சு: கோவை மாவட்ட பாஜ தலைவர் கைது

கோவை: எம்.பி.யை மிரட்டும் வகையில் பேசியது தொடர்பாக கோவை மாவட்ட பாஜ தலைவரை போலீசார் நேற்று கைது செய்தனர். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி சார்பில் கோவை பீளமேடு புதூர் பகுதியில் கடந்த 18ம் தேதி  ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோவை மாவட்ட பாஜ தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசும்போது ஆ.ராசா குறித்து சர்ச்சை ஏற்படும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து தபெதிக மாநகரத்…

அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் எடப்பாடி அணி தீவிரம்: முட்டுக்கட்டை போடுமா ஓபிஎஸ் அணி?

சென்னை: அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த எடப்பாடி  அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, பொதுக்குழு  உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த  முயற்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முட்டுக்கட்டை போடுவார்களா என்ற  கேள்வி எழுந்துள்ளது. அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி  நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக  தேர்வு செய்யப்பட்டார். அந்த கூட்டத்தில், விரைவில் பொதுச்செயலாளர்  தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான்  ஓ.பன்னீர்செல்வம்,…

2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த உ.பி-யில் பீகார் முதல்வர் நிதிஷ் போட்டி?.. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் பரபரப்பு பேட்டி

லக்னோ: வரும் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், உத்தரபிரதேசத்தில் போட்டியிட உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் பீகார் முதல்வராக ஆட்சி நடத்தி வருகிறார். வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை…

1 90 91 92 93 94 161