Browsing: அரசியல்

தென் மாவட்டங்களில் பலத்தை காட்ட திட்டம்; ஓபிஎஸ்- சசிகலா பகுதிகளில் எடப்பாடி சுற்றுப்பயணம் துவக்கம்: விருதுநகரில் கருப்புகொடி காட்ட முயன்ற 35 பேர் கைது

மதுரை: தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு செல்வாக்கு அதிகம் என்று கூறப்படும் நிலையில், அங்கும் தொண்டர்கள் தன் பக்கம்தான் என்று பலத்தை காட்டுவதற்காக எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை நேற்று துவக்கினார்.  விருதுநகரில் அவருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டனர். அதிமுக தற்போது இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு என இரண்டாக உடைந்துள்ளது. இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியுடன் மேற்கு மாவட்டத்தினரே அதிகளவில் உள்ள நிலையில், தென்மாவட்டத்தினரிடம்…

திருவள்ளூர் தெற்கு மாவட்டத்துக்கு புதிய செயலாளர்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அ.மனோகரன் (அமைப்பு செயலாளர்), எஸ்.ஆர்.அஞ்சுலட்சுமி ராஜேந்திரன் (அமைப்பு செயலாளர்), ஏ.சுப்புரத்தினம் (தேர்தல் பிரிவு செயலாளர்), ஆர்.ராஜலட்சுமி (மகளிர் அணி செயலாளர்), ஆதிரா நேவிஸ் பிரபாகர் (மருத்துவ அணி செயலாளர்), திருவாலாங்காடு ஜி.பிரவீன் (மாணவர் அணி செயலாளர்), இமாக்குலீன் ஷர்மிளி (மகளிர் அணி இணை செயலாளர்). எம்.ஆர்.ஆறுமுகம் என்கிற கேபிள் ஆறுமுகம் (திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் – அம்பத்தூர்,…

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம்; திமுக மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் பட்டியல்: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் பட்டியலை பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளராக க.சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவர்- ச.இனியரசு, துணைச் செயலாளர்கள்-வீ.கோகுலகண்ணன், க.செல்வம், கு.மலர்விழி, பொருளாளர்-…

திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெளியானது. கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த பட்டியலை வெளியிட்டார். பெரும்பாலும் மூத்த அமைச்சர்கள் ஏற்கனவே அவர்கள் வகித்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருசில…

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை வறுத்தெடுக்கும் பாஜ எம்எல்ஏக்கள்: வீடியோ வைரல்- பரபரப்பு

புதுச்சேரி: பாஜ எம்எல்ஏக்கள் முதல்வர் ரங்கசாமியை வறுத்தெடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. என்.ஆர் காங்கிரஸ்- பாஜ எம்எல்ஏக்கள் சபாநாயகருடனான பேச்சுவார்த்தைக்கு முன்பாக பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் எம்எல்ஏக்கள்  கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட்ஜான்குமார், பாஜ ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர், கோலப்பள்ளி அசோக், ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதில் முதல்வரின் செயல்பாடுகள் குறித்து பாஜ எம்எல்ஏக்கள்…

கூடலூரில் ராகுல்காந்தி இன்று நடைபயணம் – Dinakaran

மஞ்சூர்: கூடலூரில் ராகுல்காந்தி இன்று நடைபயணம் மேற்கொள்கிறார். அகில  இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் துவக்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி வழங்கி தொடங்கி வைத்தார். தற்போது கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு வருகிறார். இது குறித்து நீ மாநில காங்கிரஸ்…

அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய பொதுக்குழு அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 9 காலை 9 மணிக்கு அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15-ஆவது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 9-10-2022…

தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் ஆயுத பூஜை, தீபாவளி விடுமுறை காலத்திற்கான ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயத்தப்பட்டுள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை எடுத்து அதனை முறைப்படுத்த பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அதைக் கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசு, கட்டணங்களை குறைக்கும்படி ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களை அழைத்து வேண்டுகோள் விடுத்திருக்கிறது.…

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் காவல்துறையின் நடவடிக்கையால் வன்முறை கட்டுக்குள் வந்துள்ளது: அண்ணாமலை பேட்டி

திண்டுக்கல்: காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் வந்துள்ளதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திண்டுக்கல்லில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பாஜ மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக, பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது சில விஷமிகள் தாக்குதலை தொடுத்துள்ளனர். தீ வைப்பு சம்பவங்கள் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட பாஜவினருக்கு கட்சி உறுதுணையாக நிற்கிறது. பாஜவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினரின்…

சொல்லிட்டாங்க…

* இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பு, ஆராய்ச்சி பல மக்களின் உயிரை காப்பாற்றும். எனவே அவர்கள் சமூக பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். இந்திய குடியரசு தலைவர் முர்மு* தேர்தல் சின்னம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும். இந்த தீர்ப்பு யார் உண்மையான சிவசேனா என்பதை உறுதி செய்யும். சிவசேனா தலைவர் உத்தவ்தாக்ரே*கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மியினர் போலி குற்றசாட்டு கூறுவார்கள். அதன்பின் மன்னிப்பு கேட்பார்கள். பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா *…

1 87 88 89 90 91 161