Browsing: அரசியல்

ஆவின் பால் மற்றும் அதன் பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மை காலமாக ஆவின் பால் மற்றும் உப பொருட்களின் விநியோகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 14 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட 10 லட்சம் லிட்டர் பால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால் மற்றும் இதர பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.ஆவின் நிறுவனத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே…

திமுகவில் இருந்து 4 பேர் தற்காலிக நீக்கம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுகவில் இருந்து காஜாமலை விஜய் உள்ளிட்ட 4 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் வெ.ராமதாஸ் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட…

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்றம் 3வது நாளாக முடங்கியது!!

புதுடெல்லி: நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்ந்து 3வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் அதானி விவகாரத்தை எழுப்பி ஒன்றிய அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. அதை முறியடிக்கும் விதமாக ராகுலின் லண்டன் பேச்சுக்களை கண்டித்து பாஜ எம்பிக்கள் அமளி செய்கின்றனர். சமீபத்தில் லண்டன் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக குற்றம்சாட்டினார்.…

சவப்பெட்டிகளுடன் கவர்னர் மாளிகை நோக்கி 17ல் ஊர்வலம்

அருப்புக்கோட்டை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் திணிக்கப்பட்டதை கண்டித்து உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவின் பெயர் அரசு  மருத்துவக்கல்லூரியில் கட்டப்படும் புதிய அரங்கத்திற்கு சூட்டப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்பட்டு ஏறத்தாழ 44 பேர் உயிரை மாய்த்த பிறகும் கூட, கவர்னர் கையொப்பமிட மறுத்து இருக்கிறார். ஆன்லைன் ரம்மி தடை மசோதா உட்பட 21…

பிளஸ்1 பொதுத்தேர்வு தொடக்கம் காஞ்சிபுரத்தில் 13,000 மாணவர்கள் தேர்வு எழுதினர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் பிளஸ்1 படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்வு எழுதினார்கள். தேர்வு தொடங்குவதற்கு முன் கோயிலுக்கு சென்று சாமியை வணங்கியும், ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்றும் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ளவர்களின் விவரம் வருமாறு: தமிழ்நாடு முழுவதும் பிளஸ்1 படிக்கு மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று முதல் ஏப்ரல் மாதம் 5ம்தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்வுக்கு, மேல்நிலை முதலாம்…

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு தான் இந்தியாவின் வளர்ச்சியா? கே.எஸ்.அழகிரி கேள்வி

ஆலந்தூர்: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதுதான் இந்தியாவின் வளர்ச்சியா, என்று ஒன்றிய அரசை கண்டித்து சின்னமலையில் நடந்த ஆர்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார். அதானியின் பங்குச்சந்தை ஊழல்களுக்கு துணை போகும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் சின்னமலையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், அசன் மவுலானா, பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலிட…

2024 நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற பணியாற்றுவோம்: சமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சமத்துவ மக்கள் கழகத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை கோயம்பேட்டில் நடந்தது. கூட்டத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவராக எர்ணாவூர் நாராயணனை கட்சி நிர்வாகிகள் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளராக சூலூர் சந்திரசேகரன், பொருளாளர் கண்ணன், துணைத் தலைவராக நிப்பான் தனுஷ்கோடி, இளைஞரணி செயலாளராக பிரபு, மாணவரணி செயலாளராக கார்த்திக் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் …

சொல்லிட்டாங்க…

* இந்தியாவிடம் உதவிகளை பெற்றுக் கொண்டு, இந்திய மீனவர்களை இலங்கை சிறை பிடிக்கிறது. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்* அதானி குழுமத்துக்கு எதிரான பங்கு சந்தை முறைகேடுகள் குறித்து செபி விசாரணை நடத்தி வருகிறது. – ஒன்றிய இணையமைச்சர் அமைச்சர் பங்கஜ் சவுத்ரி* காலாவதியான சுங்கச்சாவடிகள் பொதுமக்களிடம் பணம் கொள்ளையடித்து வருகின்றன. – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன்* ஒன்றிய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்கள் 16 பேரையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை…

நாடாளுமன்ற துளிகள்

*ஏகே 203 ரைபிள்ஸ் உற்பத்திமாநிலங்களவையில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில்,‘‘ஆயுத படைகளுக்கான ஏகே 203 ரக துப்பாக்கிகள் உத்தரப்பிரதேசத்தின் கோர்வாவில் உளள் இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவனத்தில் உற்பத்தி மற்றும் சோதனை கட்டத்தில் உள்ளது. ஏகே 203 துப்பாக்கிகளை உள்நாட்டில் உருவாக்குவது பாதுகாப்பு படைகளுக்கான தாக்குதல் துப்பாக்கிகள் பெறுவதில் தன்னிறைவுக்கு வழிவகுக்கும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.* பாதுகாப்பு துறை இலக்கு ரூ.1.75லட்சம் கோடிபாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட்…

அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் இருப்பார்: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு

பூந்தமல்லி:அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என்று அமைச்சர் சா.மு.நாசர் கூறினார். திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவேற்காடு நகர திமுக சார்பில், நேற்று திருவேற்காடு நகராட்சி அலுலவகம் அருகே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகர செயலாளரும் நகரமன்ற தலைவருமான என்இகே.மூர்த்தி தலைமை தாங்கினார். பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, வி.பி.ராஜன் ஆகியோர் முன்னிலை…

1 8 9 10 11 12 161