‘அத்தைக்கு மீசை முளைத்தால் தான் சித்தப்பா…’ அதிமுக – பாஜ கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுக்க முடியாது: எச்.ராஜா பதிலடி
அவனியாபுரம்: ‘அதிமுக – பாஜ கூட்டணி குறித்து மாநில தலைவர் எந்த முடிவும் எடுக்க முடியாது’ என அண்ணாமலையின் கருத்து பாஜ தேசிய குழு உறுப்பினர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் நேற்று பாஜ தேசியக்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக – பாஜ கூட்டணி குறித்து எந்த முடிவுகளும் மாநில தலைவரோ, மற்ற நிர்வாகிகளோ அறிவிக்க முடியாது. ஆலோசனைகள், வழிமுறைகள், கருத்துக்களை பதிவு செய்யலாம். ஆனால் கூட்டணி குறித்து பாஜவின் தலைமைக்குழு…