Browsing: அரசியல்

சொல்லிட்டாங்க…

* ஒன்றிய அரசிடம் இருந்து மேற்குவங்கத்துக்கு மட்டும்தான் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி* மோதானி (மோடி-அதானி) மாடல் என்பது முதலில் கொள்ளை அடித்து விட்டு, பின்னர் தண்டனையின்றி தப்புவது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் இல்லாமல் இருந்திருந்தால் டெல்லி 10 மடங்கு முன்னேற்றமடைந்து இருக்கும். – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்* மோடி தலைமைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. காங்கிரசும்,…

ரெட் நோட்டீஸ் பட்டியலில் சோக்சி நீக்கம் நண்பனை ஒன்றிய அரசு காப்பாற்றி விட்டது: காங்கிரஸ் கடும் தாக்கு

புதுடெல்லி: அமலாக்கத்துறையும், சிபிஐயும் எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைக்கும் நிலையில், ஒன்றிய அரசு தனது நண்பனை விடுவித்து விட்டது என மெகுல் சோக்சி விவகாரத்தில் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்தனர். சோக்சி, கரீபியன் தீவுகளில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டிற்கு தப்பி ஓடினார். அந்தநாட்டின் குடியுரிமை பெற்றுள்ள சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. Source link

தூத்துக்குடியில் பனை மேம்பாட்டுத் திட்டம்.. கோவையில் பூச்சிகள் அருங்காட்சியகம் மேம்பாடு : வேளாண் பட்ஜெட்டின் A டூ Z அறிவிப்புகள்!!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று  தாக்கல் செய்யப்பட்டது .இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து தமது உரையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவை பின்வருமாறு..,.*2,504 கிராமங்களில் ரூ.230 கோடி நிதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம். *பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74…

விவசாயிகளுக்கு தகவல் வழங்க WhatsApp குழுக்கள், ஒரு தளம் ஒரு பயன் திட்டம், கோவையில் கருவேப்பிலை தொகுப்பு : வேளாண் பட்ஜெட்டில் தகவல்!!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று  தாக்கல் செய்யப்பட்டது .இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து தமது உரையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவை பின்வருமாறு..,.*2,504 கிராமங்களில் ரூ.230 கோடி நிதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம். *பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74…

இபிஎஸ் கையில் இரட்டை இலை இருக்கும்வரை கட்சிக்கு சரிவுதான்: டிடிவி தினகரன் பேட்டி

தஞ்சாவூர்: இபிஎஸ் கையில் இரட்டை இலை இருக்கும் வரை கட்சிக்கு சரிவுதான் ஏற்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: கடந்த 2017ம் ஆண்டு தர்மயுத்தம் நடத்தியது தவறு என ஓபிஎஸ் உணர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ளார். மேற்கு மண்டலம் எங்களது கோட்டை என எடப்பாடி கூறிவந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் 66ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் படுதோல்வி அடைந்துள்ளார்.…

செல்போன் பறித்த சிறுவனால் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணியின் கை, கால் துண்டானது: பேசின்பிரிட்ஜ் பகுதியில் பரிதாபம்

தண்டையார்பேட்டை: பேசின்பிரிட்ஜ் பகுதியில் செல்போன் பறித்த சிறுவனால் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியின் கை, கால் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் சிக்னலுக்காக மெதுவாக செல்லும்போது, தண்டவாளத்தில் நிற்கும் வழிப்பறி கொள்ளையர்கள், ரயிலின் படிக்கட்டு பகுதியில் நின்று செல்லும் பயணிகளின் செல்போன்களை பறித்து செல்வது தொடர் கதையாக உள்ளது. இதில், பல பயணிகள் கீழே…

பெண்களுக்கான பொற்காலம் …இலவச பேருந்து, மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, சிறப்பு புத்தொழில் இயக்கம் : பட்ஜெட்டில் அசத்தல்!!

சென்னை: பெண்களுக்கென சிறப்பு புத்தொழில் இயக்கம் ஒன்றை அரசு தொடங்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு பட்ஜெட் 2023-ல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். அதன் விவரம்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1,937 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 315 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வரும் கல்வி ஆண்டுமுதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து…

செப்.15ல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்… தமிழக பட்ஜெட்டில் A டூ Z அசத்தல் அறிவிப்புகள்!!

சென்னை: மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்.15-ம் தேதி தொடங்கும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 3வது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிகழ்த்திய பட்ஜெட் உரை பின்வருமாறு…*தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாக குறைத்திருக்கிறோம்.பல நலத்திட்டங்களை செயல்படுத்தியபோதும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவாய்…

சொல்லிட்டாங்க

* பாஜவை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத எந்த கூட்டணிக்கும் வாய்ப்பே சுத்தமாக இல்லை. – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்* கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை தமிழில் அமைக்க – பாமக நிறுவனர் ராமதாஸ்* குருவி போல் சிறுக சிறுக சேர்த்த பணம் அரவக்குறிச்சி தேர்தலில் செலவாகி விட்டது. இப்போது கடனாளியாக உள்ளேன். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை * மோடிக்கு எதிராக ஒரு கருத்து சொன்னால், அது இந்தியாவிற்கு எதிராக…

1 5 6 7 8 9 161