ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு: பாஜகவை கழற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி?
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி அணி சார்பில் யாரை வேட்பாளராக இறக்குவது என்பது தொடர்பாக முடிவு எடுக்க முடியாமல் திணறி வந்தது. தொடக்கத்தில் முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இதற்கு எடப்பாடியும் ஓகே தெரிவித்திருந்தார். ஆனால் தொகுதியின் கள நிலவரம் அறிந்த ராமலிங்கம் மெல்ல ஜகா வாங்கிக்கொண்டார். இதன்பிறகு முன்னாள் எம்எல்ஏ தென்னரசு,…









