ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:பத்திரப்பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்கும் என்பதை முன்னெடுத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், ஒப்புதல் அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவரும் நல்லதொரு முன்னுதாரணத்தை தொடங்கி வைத்துள்ளனர். அதிகமான மக்கள் அடிக்கடி வந்து செல்லும் மின்வாரியம், வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், உணவுப்பொருள் வழங்கல் துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் போன்ற அலுவலகங்களும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கினால் மக்களுக்கு பேருதவியாக…