Browsing: அரசியல்

பணக்காரர்களுக்கு, ஏழைக்களுக்கு என இரண்டு இந்தியாவை உருவாக்குகிறார் மோடி: குஜராத்தில் ராகுல் பிரசாரம்

தஹோத்: குஜராத்தில் சட்டப் பேரவைக்கான தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ராகுல் காந்தி, இரண்டு இந்தியாக்களை பிரதமர் மோடி உருவாக்குவதாக குற்றம்சாட்டினார். குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான காங்கிரசின் பிரசாரத்தை பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தஹோத் மாவட்டத்தில் ராகுல் காந்தி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: இன்று, பிரதமர் மோடி 2 இந்தியாக்களை உருவாக்கி வருகிறார். ஒன்று பணக்காரர்கள், அதிகாரம் படைத்தவர்கள், தொழிலதிபர்களுக்கானது, மற்றொன்று சாமானியர்களுக்கானது. இதுபோல் இரு இந்தியாக்கள் இருப்பதை…

ஒன்றிய நிதி அமைச்சருடன் கலந்து பேசி பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்:தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 30 வரை குறைய வாய்ப்புள்ளதாக  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடி இன்று 2 இந்தியாவை உருவாக்கி வருகிறார். ஒன்று பணக்காரர்கள், அதிகாரம் படைத்தவர்களுக்கானது. மற்றொன்று சாமானியர்களுக்கானது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* பண வீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை தீர்ப்பதில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 100 சதவீதம் தோல்வி கண்டுவிட்டது. – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்* தமிழகம் போன்ற மாநிலங்களை அடக்கி வைக்க நினைக்கிறார்கள். சமூகநீதி கொண்ட தமிழகத்தை வஞ்சிக்க பார்க்கிறது ஒன்றிய பாஜ அரசு. – தமிழக…

ஒரு இனத்தையே அழித்த ராஜபக்சேவுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: ஒரு இனத்தையே அழித்த ராஜபக்சே மிகப்பெரிய தண்டனையை அனுபவிக்கிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் போராட்டகாரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜனாமா செய்துள்ளார். ஒரு இடத்திற்காக போராடிய விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை இரக்கமற்ற முறையில் கொலை செய்து, அத்தனை மக்களையும் கொலை, கொள்ளை, பலாத்காரம் செய்து மிக கொடுரமாக நடந்து கொண்ட ராஜபக்சேவிற்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை.…

இந்தி திணிப்பை கண்டித்து ஜிப்மர் மருத்துவமனையில் திமுக முற்றுகை போராட்டம்: 4 எம்எல்ஏக்கள் கைது

புதுச்சேரி:  இந்தி திணிப்பை கண்டித்து ஜிப்மர் மருத்துவமனையை திமுக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்பட 4 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து கோப்புகள், பதிவேடுகள் மற்றும் தலைப்புகளில் இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதனை கண்டித்து திமுக சார்பில் நேற்று ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமை தாங்கினார். திமுக…

தமிழ்நாட்டில் காவிரி ஆற்றில் எந்த அனுமதியுமின்றி தங்களின் நிலங்களுக்கு நீர் எடுத்துசெல்வதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் தலைமடை பாசன மாவட்டங்களில், சிலர் சட்டவிரோத அமைப்புகளை  ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலமாக காவிரி ஆற்று நீரை எந்த அனுமதியும் இல்லாமல் தங்களின் நிலங்களுக்கு கொண்டு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். நீரேற்று பாசன சங்கம் அமைத்து, காவிரி நீரை இறைப்பதை அரசு தடுக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர்…

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இந்தியில் நடந்த ‘சி’ பிரிவு தேர்வு: ராமதாஸ் கடும் கண்டனம்

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இந்தியில் தேர்வு நடத்தப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிளம்பர் உள்ளிட்ட ‘சி’ பிரிவு பணிகளுக்கு கூட இந்தியில் தான் தேர்வும், நேர்காணலும் நடத்தப்படுகின்றன. அதனால், 95% வேலைவாய்ப்புகள் உள்ளூர் மக்களுக்கு கிடைக்காமல் வட இந்தியர்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட…

இலங்கையில் நெருக்கடி நிலையை திரும்ப பெறவேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: இலங்கை ஆட்சிப் பொறுப்பில் ராஜபக்சே சகோதரர்கள் விலக இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: உணவு சமைக்க எரிப்பதற்கு விறகு கிடைக்காமல், தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை உடைத்து எரிப்பதாக, நேற்று முன்தினம் என்னிடம் கூறினர். கேட்க வேதனையாக இருந்தது. போராட்டங்களை ஒடுக்குவதற்கு, நெருக்கடி நிலையை அறிவித்த கோத்தபய அதைத் திரும்பப் பெற்றார். ஆனால், மீண்டும் நேற்று (9ம்தேதி)நெருக்கடி…

குட்கா, கஞ்சா தமிழகத்தில் பரவ காரணமே அதிமுக ஆட்சிதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இன்றைக்கு, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவிலே கஞ்சாவைப்  பயன்படுத்திக்கொள்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது.  சபாநாயகர் அப்பாவு: நீங்கள் எந்த அதிகாரியென்று சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமி: இதில் யார் ஈடுபட்டார்களோ அவரைத்தான் நான் சொல்கிறேன்.அப்பாவு: நீங்கள் அரசாங்கத்திடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்.எடப்பாடி பழனிசாமி: நாகப்பட்டினத்தில் என்று நான்…

அண்ணாமலையின் ‘பல்லக்கு அரசியல்’ : பாலகிருஷ்ணன் கண்டனம்

கரூர்: பல்லக்கு தூக்குவேன் என்று தேவையின்றி அரசியல் செய்வதா என்று பாஜ தலைவர் அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: தருமபுர ஆதினத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்வு சர்ச்சைக்கு உள்ளாகியது. இந்த வழக்கம் பிற ஆதீனங்களில் தற்போது இல்லை. மனிதனை பல்லக்கில் உட்கார வைத்து அதை மனிதன் தூக்குவதை மட்டுமே மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. ஆன்மீக விழாக்கள், இறை நம்பிக்கை, இறை…

1 153 154 155 156 157 161