Browsing: அரசியல்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி, டவுன் நகர காவல் நிலையம் எதிரே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், இங்குள்ள கடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி, அங்கிருந்த காய்கறி கடைகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு மாற்று இடமாக பழைய பயணியர் விடுதி வளாகத்தை சுத்தம் செய்து, அங்கு காய்கறி வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. அதற்கான பணிகள் நகராட்சி சார்பில் நடந்து வருகிறது. இதைதொடர்ந்து,…

தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் உலக அளவில் தமிழகத்தின் புகழ் பரவுகிறது: ஜி.கே.வாசன் பெருமிதம்

சென்னை: தேவசாகயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கியிருப்பதன் மூலம் உலக அளவில் தமிழ்நாட்டின் புகழ் பரவுகிறது என்று ஜி.ேக.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த தேவசகாயத்துக்கு இத்தாலி நாட்டின் வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இதனால் உலக அளவில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்ந்திருக்கிறது. ‘அதிகரிக்கும் கஷ்டங்களைத் தாங்குதல்’ என்று அழைக்கும் புனிதர் பட்டத்தைப் பெற்ற முதல் தமிழர் தேவசகாயம் என்பது பாராட்டுக்குரியது. தமிழகத்தைச் சேர்ந்த…

மக்கள் முகம் காண ஆவலுடன் இருக்கிறேன் திராவிட மாடல் ஆட்சி சாதனைகளை தொடர்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாமல் உழைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், பத்தாண்டுகால இருளை விரட்டி, புதிய ஒளி தமிழ்நாடெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் உயர்வான திட்டங்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான தகுதிமிகு சட்டங்கள, அரசின் அறிவிப்புகளை முழுமையாகச் செயல்படுத்தும் அர்ப்பணிப்பு, கடைசி மனிதருக்கும் பலன்கள் கிடைத்திடும் வகையில்…

சொல்லிட்டாங்க…

* எதிர்கட்சிகள் திமுக அரசு மீது குறைகளையும் புகார்களையும் முன்வைத்தபோது, அமைச்சர்கள் ஆதாரங்களுடன் விளக்கினர். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.* பாஜ, ஆர்எஸ்எஸ் போல கருத்து சுதந்திரத்தை நெரிக்கும் கட்சி அல்ல காங்கிரஸ். – அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி* காதல் தோல்வி அடைந்த இளைஞன் பெண்ணின் முகத்தில் திராவகம் வீசியது போல, சிபிஐயை பாஜ அரசு பயன்படுத்துகிறது. – மகாராஷ்ர மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே* விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் ஏழைகள். ஏதுமற்றவர்கள்.…

தமிழகத்தில் இளைஞர் நலன் வாரியம் அமைக்க வேண்டும்: முதல்வருக்கு இளைஞர் சங்கம் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் வெளியிட்ட அறிக்கை: இளைஞர்கள் நேசிக்கும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓர் ஆண்டில் பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துகிறோம். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர் சமூதாயத்திற்கு பல்வேறு உதவி செய்து வருகிறீர்கள். இளைஞர் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட தாங்கள் இளைஞர் நலன் வாரியம் அமைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். பல்வேறு வாரியங்கள் திமுக ஆட்சியில் தலைவர் கலைஞரால்…

சர்வாதிகார மனப்பான்மை கொண்ட ஆர்எஸ்எஸ், பாஜ.வை மாநில கட்சிகளால் வீழ்த்த முடியாது: ராஜஸ்தான் மாநாட்டில் ராகுல் பேச்சு

புதுடெல்லி: ‘ஆர்எஸ்எஸ்.சும், பாஜ.வும் ஆபத்தானவை. சர்வாதிகார மனப்பான்மை கொண்டவை. மாநில அளவிலான கொள்கைகள் கொண்ட கட்சிகளால், இவற்றை வீழ்த்த முடியாது,’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் நேற்று நிறைவடைந்தது. இதில் நிறைவு உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: பாஜ, ஆர்எஸ்எஸ் போல கருத்து சுதந்திரத்தை நெரிக்கும் கட்சி அல்ல காங்கிரஸ். அதனால்தான் கட்சித் தலைமை பற்றிய கட்சி உறுப்பினர்கள் அப்பட்டமாக…

திமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டி

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 1. தஞ்சை சு.கல்யாணசுந்தரம்2. கே.ஆர்.என். ராஜேஷ்குமார் 3 ரா. கிரிராஜன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சு.கல்யாணசுந்தரம் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவார். மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.…

சொல்லிட்டாங்க…

எந்த மொழியையும் இழிவுபடுத்தக் கூடாது என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்றுக்கொள்ள வேண்டும். – சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத்பாஜ ஆட்சியில் நாட்டின் பணவீக்கமும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. – காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து, நஷ்டத்தில் இயங்கும் அந்த நிறுவனங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தேமுதிக தலைவர் விஜயகாந்த்இந்துத்துவ சனாதன சக்திகளால் துணிச்சல் பெற்றுள்ள ஒருசிலர், தமிழகத்தில் மதவெறியை தூண்ட முயற்சிக்கின்றனர். – மதிமுக பொதுச் செயலாளர்…

குளு குளு குற்றாலத்தில் அனல் பறக்கும் அரசியல்!: குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மே 25-ல் நடைபெறும் அறிவிப்பு..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மே 25-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமான குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் 8 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தலில் திமுக-வும் அதிமுக-வும் நேரடியாக மோதின. தேர்தலில் திமுக-வுக்கு 4 வார்டுகளும், எதிர்த்து போட்டியிட்ட அதிமுக-வுக்கு 4 வார்டுகளும் கிடைத்தன. திமுக, அதிமுக தலா 4 இடங்களை பெற்று சமநிலையில் இருந்ததால் தலைவர் பதவிக்கு யாரும்…

சொல்லிட்டாங்க

* நமது சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பயன்படுத்தி நாட்டை பிளவுபடுத்தி, ஒற்றுமை மற்றும் வேற்றுமை பற்றிய எண்ணத்தைத் தகர்ப்பதும் பாஜவின் எண்ணம்.- காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி.* இந்தி மொழி திணிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை. எல்லா மொழிகளும் வளர ஊக்குவிக்கப்படுகிறது.- தமிழக கவர்னர் ரவி* முதலில் சசிகலா ஆட்சிக்கு வரட்டும். அதன் பிறகு ஜெயலலிதா போல் சிறப்பாக ஆட்சி செய்வதை பற்றி பேசலாம்.- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.* பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும்…

1 151 152 153 154 155 161