Browsing: அரசியல்

மத்தியில் ஆட்சி அதிகாரம் இருப்பதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த பாஜ முயற்சி: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: மத்தியில் ஆட்சி அதிகாரம் இருப்பதால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த பாஜ முயற்சி செய்வதாக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: ஆன்லைன் ரம்மி லாட்டரி உள்ளிட்டவற்றை ஒழிக்க வேண்டியதில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விட எங்களுக்கு அக்கறை அதிகம். காவல்துறை ஐபிசி படி தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு தற்போது அது நிலுவையில் உள்ளது.…

மாநகராட்சி மன்ற குழு நிர்வாகிகள் நியமனம்: அதிமுக அறிவிப்பு

சென்னை:  அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி மன்ற குழு தலைவராக 182வது வார்டு உறுப்பினர் சதீஸ்குமார், துணை தலைவர்களாக 84வது வார்டு உறுப்பினர் ஜான் மற்றும் 145வது வார்டு உறுப்பினர் சத்தியநாதன், செயலாளராக 7வது வார்டு உறுப்பினர் கார்த்திக், கொறடாவாக 170வது வார்டு உறுப்பினர் கதிர்முருகன் மற்றும் பொருளாளராக 24வது வார்டு உறுப்பினர் சேட்டு ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். Source link

காங்கிரஸ் மீது கடும் அதிருப்தி பாஜவில் இணைகிறார் நடிகை நக்மா?

சென்னை: நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் பெயர் பட்டியல் கடந்த 29ம் தேதி வௌியிடப்பட்டது. இந்த முறை மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நடிகையுமான நக்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று நினைத்திருந்தார். ஆனால், அவரது பெயரை காங்கிரஸ் தலைமை அறிவிக்கவில்லை. இந்நிலையில் அதிர்ச்சியடைந்த நக்மா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது கடந்த 2003-04ம்…

தமிழகத்தில் இருந்து ஆளுநர் வெளியேற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி

சென்னை: தமிழகத்தில் இருந்து ஆளுநர் வெளியேற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ராஜ்பவனை நோக்கி பேரணி செல்கின்றனர். கிண்டியில் புறப்பட்ட பேரணி விசிக வன்னியரசு, மதிமுக மல்லை சத்யா, கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். Source link

அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவுக்கு பதிலடி தருவோம்: செல்லூர் ராஜூ காட்டம்

மதுரை: அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம் பதவி பெறுவதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். இரை போட்டால் கூட்டம் வரும்; தீர்ந்தால் பறந்துவிடும் என பாஜக கூட்டத்தை காக்கா கூட்டத்தோடு ஒப்பிட்டு பேசினார். Source link

கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பிரேமலதாவை செயல் தலைவராக்க கட்சியினர் வலியுறுத்தல்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிரேமலதாவை செயல் தலைவராக்க பல்வேறு மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் துணை பொது செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் 78 மாவட்ட தேமுதிக…

பாஜவில் சசிகலாவை இணைக்க எந்த நடவடிக்கையும் இல்லை: மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் பேச்சு

சென்னை: பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி நிறைவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட பாஜ சார்பில், தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக பாஜ துணைத் தலைவர் கரு நாகராஜன் கூறியதாவது:‘‘பாஜ ஆட்சிக்கு முன் 51 லட்சம் நிறுவனங்கள் உற்பத்தி பிரிவில் இருந்த நிலையில் அவற்றின் எண்ணிக்கை 1.21 கோடியாக உயர்ந்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் பல…

அதிமுகவுக்கு வி.பி.துரைசாமி அறிவுரை சொல்ல வேண்டியதில்லை: பாஜவுக்கு எடப்பாடி பதிலடி

சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகிய இருவரும் நேற்று தலைமை செயலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டனர். பின்னர், எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட இரு ராஜ்யசபா வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் அதிமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பது ஊடகத்திற்கும், நாட்டு…

திடீர் பேட்டியால் பரபரப்பு எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லி முடித்த தங்கபாலு

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு, நேற்று காலை திடீரென அவசர பத்திரிகையாளர் சந்திப்பை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டினார். அதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படாததால் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏனென்றால், திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா சீட்டுக்கு குறி வைத்தவர் தங்கபாலு. அது ப.சிதம்பரத்துக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்தார். எனவே முக்கிய முடிவுகளை அறிவிக்கப் போகிறார் என அனைவரும் காத்திருந்தனர். ஆனல் சாதி வாரி கணக்கெடுப்பை பற்றி சொல்லி பரபரப்புக்கு…

கேரள மாநிலம் திரிகாகரை சட்டமன்ற இடைத்தேர்தலில் காங். கட்சி வேட்பாளர் உமா தாமஸ் அபார வெற்றி: தோல்வியை தழுவியது பாஜக..!!

எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திரிகாகரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உமா தாமஸ் வெற்றிபெற்றார். திரிகாகரை எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.டி.தாமஸ், கடந்த டிசம்பர் மாதம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதனால் இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி சார்பாக உயிரிழந்த எம்.எல்.ஏ.வின் மனைவி உமா தாமஸ் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர். ஜூன் 1ம் தேதி திரிகாகரை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் …

1 142 143 144 145 146 161