Browsing: அரசியல்

மேகதாது விவகாரத்தில் 2 மாநிலங்களும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு தீர்வு காண வேண்டும்: பாஜ மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பேட்டி

வேலூர்: மேகதாது விவகாரத்தில்2 மாநிலங்களும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்று பாஜ தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினார்.பாஜக தேசிய மகளிரணி  தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று வேலூர் வந்தார். காட்பாடிக்கு ரயில் மூலம் வந்த அவரை மாநில செயலாளர் கார்த்தியாயினி, பாஜ மாவட்ட தலைவர் மனோகரன், பொறுப்பாளர்கள் சரவணன், ஜெகன், பாபு ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து வானதி சீனிவாசன், நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியில் பாஜ பொறுப்பேற்று…

புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி: எடப்பாடி பழனிசாமி பேசாமல் சென்றதால் நிர்வாகிகள் அதிருப்தி

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசலில், தமிழகத்தில் முதல் முறையாக அதிமுகவில் நடந்த உட்கட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட கிளை கழக நிர்வாகிகளுக்கான அங்கீகாரம் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தலைவாசல் அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட கிளை கழக நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, அவர் எதுவுமே பேசாமல் சான்றிதழ்களை மட்டுமே வழங்கி விட்டு சென்றது…

ஆளுநர் பேச வேண்டியது Rule of law தானே தவிர Rule of manu அல்ல! : முரசொலி சாடல்!!

சென்னை: ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநரா? அல்லது சனாதன காவலரா ? என முரசொலி நாளேடு சாடியுள்ளது. முரசொலி தலையங்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில்,   ‘தமிழ்நாட்டின் ஆளுநராக வந்தது முதல் ஆர்.என்.ரவி அவர்கள், உதிர்த்துவரும் கருத்துகள் மாநிலத்தில் அதிகமான குழப்பதையே அதிகம் விதைத்து வருகின்றன. அதுதான் அவரது உள்ளார்ந்த நோக்கமா எனத் தெரியவில்லை.‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு அனுமதி தராமல் ஆளுநர் மாளிகையில் ஊறப்போட்டு வைத்து கோடிக்கணக்கான மக்களின் விரும்பத்துக்கு எதிராக இருந்தார். திரும்பத் திரும்பச் சொன்ன பிறகு – அவர்…

சொல்லிட்டாங்க…

தண்ணீர், மனித குலத்திற்கு இயற்கை வழங்கிய மிகப்பெரிய கொடை. ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் பாதுகாக்க வேண்டும். :- பிரதமர் மோடிசட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது அதிமுக தான். :- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.குமரியில் பல்வேறு கோயில் வளாகங்களை சங் பரிவார அமைப்பினர் பயன்படுத்தி, வெறுப்பு மூட்டி வருகின்றனர். :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன்தமிழ்நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஆளுநர் கருத்து சொல்வதின் பின்னணி பலத்த சந்தேகங்களையும் அச்சத்தையும் விதைக்கிறது. …

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜ சதி வேலை: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திருவாரூர்: திருவாரூரில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது ஏற்புடையதல்ல. அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை பரப்பலாம். ஆளுநராக இருந்து கொண்டு நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், நாட்டின் வரலாறு தெரியாமலும் ஆளுநர் பேசுவது கண்டிக்கத்தக்கது. கன்னியாகுமரியில் நடந்த தேரோட்டத்தில் தமிழக அமைச்சர்களை தேரை இழுக்க விடாமல் தடுக்க முயன்றது பாஜகவின் சதி செயல் ஆகும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை…

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக மட்டுமே; ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை..!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உள்ளும், வெளியிலும் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது அதிமுக மட்டுமே என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தாங்கள் தான் எதிர்க்கட்சியாக செயல்படுவதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் சமீப காலமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற செயல்களால் அதிமுகவை ஒழித்துவிட்டு அதன் இடத்தை பிடிக்க பாரதிய ஜனதா முயற்சித்து வருவதாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் குற்றம் சாட்டி பகிரங்கமாக பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார்.தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக தாங்கள் தான் செயல்பட்டு…

மதவாத, சனாதன, வர்ணாசிரம, வன்முறை கருத்துகளை ஆளுநர் பதவியில் இருந்துகொண்டு தெரிவிப்பது முறையல்ல: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு திமுக கண்டனம்

சென்னை: சனாதன தர்மம் குறித்து பேசிய ஆளுநர் ரவிக்கு திமுக சார்பில் பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மம் குறித்தும், வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலும் பேசிய பேச்சுக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் அவர்களின் தனிப்பட்ட ஆன்மீக எண்ணங்கள் என்பவை அவரது தனிப்பட்ட விருப்பங்கள் ஆகும். அவற்றை விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் அரசியல் சட்டத்தின் நீதிநெறிமுறைகளுக்கு…

ஆளுநர் ரவியின் பேச்சு தேசத்திற்கும் நல்லதல்ல அவர் வகிக்கும் பொறுப்புகளுக்கும் நல்லதல்ல: திருமாவளவன் பேட்டி

சென்னை: ஆளுநர் ரவியின் பேச்சு தேசத்திற்கும் நல்லதல்ல அவர் வகிக்கும் பொறுப்புகளுக்கும் நல்லதல்ல என்று திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். சனாதன தர்மம் பற்றி ஆளுநர் பேசியது அவர் ஆர்எஸ்எஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஆளுமை என்பதை காட்டுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார் Source link

கோடை வெப்பம் தாக்கம் அதிகரிப்பு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்: அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை: கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை:கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்புக்கு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 13ம் தேதி(நாளை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று என்பது அதிகரித்து வருகிறது. அதில் பெரும்பாலும்,…

அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலால் பதவி பறிக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு பாஜவில் மீண்டும் பதவி: வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக நியமனம்

சென்னை: அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் போக்கால் கட்சி பதவி பறிக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு பாஜவில் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜவில் கலை, கலாசார பிரிவின் மாநில தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் இருந்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பாஜவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கலை, கலாச்சார பிரிவில் உள்ள நிர்வாகிகள் பலரை நீக்கினார். அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமித்தார். புதியவர்களை நியமிக்க…

1 138 139 140 141 142 161