Browsing: அரசியல்

ஒற்றை தலைமைக்கே பெரும்பாலானோர் ஆதரவு எடப்பாடி மீது வழக்கு தொடர்ந்தால் வென்று காட்டுவார்: ஓபிஎஸ்சுக்கு ஓ.எஸ்.மணியன் பதிலடி

சென்னை: ஒற்றை தலைமைக்கே பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எடப்பாடி மீது வழக்கு தொடர்ந்தால் அவரே வென்று காட்டுவார் என்று  ஓபிஎஸ்சுக்கு, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளார்.  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டி: அதிமுக தலைமை கழகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கிட்டத்தட்ட மிகப்பெரும்பான்மையானவர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று பேசினர். இது குறித்து தான்…

வரும் 26ம் தேதி முதல் அமமுக செயல் வீரர்கள் கூட்டம்

சென்னை: அமமுக செயல்வீரர்கள் கூட்டம் 26ம் தேதி முதல் நடக்கிறது. அமமுகவின்  மாவட்ட வாரியான செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் கூட்டம்,  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன்  தொடர்ச்சியாக திருவள்ளூர், சேலம், தருமபுரி, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய  மாவட்டங்களில் நடைபெற உள்ளது. ஜூன் 26ல் திருவள்ளூர்; ஜூலை 3ல் நெய்காரப்பட்டி, 4ம் தேதி தருமபுரி, 13ம் தேதி  மயிலாடுதுறை, ஜூலை 14ல் அரியலூர் ஆகிய இடங்களில் நடக்கிறது. Source link

அதிமுக பொதுக்குழுவில் உறுதியாக ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்படும்: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் உறுதியாக ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு 4 ஆண்டு நல்லாட்சியை கொடுத்த எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். Source link

எடப்பாடி பழனிசாமிக்கே முழு ஆதரவு: அதிமுக இளைஞரணி செயலாளர் பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் கீழ் ஒற்றை தலைமை அமைக்க அதிமுக இளைஞர் அணி அதரவு தெரிவித்துள்ளது. அதிமுக இளைஞர் அணி செயலாளர் சிவபதி மற்றும் நிர்வாகிகள் இன்று காலை எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். பின்னர், சிவபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இளைஞர் அணி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்தோம். ஒற்றைத்தலைமை வேண்டும் என்று இளைஞர் அணி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தோம். ஒற்றைத்தலைமைக்கு ஓபிஎஸ் ஒத்துப்போக வேண்டும். அதுதான் அவருக்கு நல்லது. 4 ஆண்டுகள்…

தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் சோலை ராஜா உள்ளிட்டோர் ஈபிஎஸ்-க்கு ஆதரவு

சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக ஆலேசனை நடத்தி வருகின்றனர். தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார்,பொருளாளர் சோலை ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் ராமர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். Source link

சொல்லிட்டாங்க…

* மேகதாது அணை கட்டும் பிரச்னையில் கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு ஒன்றிய பா.ஜ. அரசு பணியக்கூடாது. காவிரியின் உரிமையை காக்க தமிழகஅரசு தொடர்ந்து போராடும். – முதல்வர் மு.க.ஸ்டாலின்* மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி, கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ* மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டறிந்து, அவற்றின் உரிமைகளை பேணுவதிலும், பங்களிப்பை உறுதி செய்வதிலும் ஒன்றியஅரசு கூடுதல் கவனம் செலுத்துகிறது. – பாஜ மாநில…

ஒற்றைத் தலைமை குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும்: அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தகவல்

சென்னை: பொதுக்குழு, ஒற்றைத் தலைமை குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என்று தற்காலிக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் கூறினார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பிரமுகர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் தற்காலிக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பொதுக்குழு மற்றும் தீர்மானம், ஓபிஎஸ் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய பிறகு…

குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட ஃபரூக் அப்துல்லா மறுப்பு… ஜம்மு – காஷ்மீரின் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பு தேவை என விளக்கம்!!

டெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்று தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 7 மாநில முதல்வர்கள் உட்பட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதினார். இதன்படி, மம்தா தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது.…

என் மீது நடவடிக்கை எடுப்பதாக பூச்சாண்டி காட்டுவதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் : ஓபிஎஸ்-க்கு ஜெயக்குமார் பகிரங்க பதிலடி!!

சென்னை : ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நான் ஒன்றும் சிதம்பர ரகசியத்தை உடைக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் பொதுக்குழு தீர்மானக்குழு கூட்டம் நடந்தது. இந்த தீர்மானக்குழு கூட்டத்தில் பன்னீர் செல்வம் 2நாள் பங்கேற்ற போதும் எடப்பாடி பழனிசாமி ஒரு நாள் கூட வரவில்லை. இந்த நிலையில் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘திமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள்…

அதிமுகவில் ஒற்றை தலைமை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி

சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘ஒற்றை தலைமை பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண ஓ பன்னீர் செல்வத்துடன் தம்பிதுரை விவாதித்தார். பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது,’என்றார். Source link

1 135 136 137 138 139 161