Browsing: அரசியல்

ஐபிஎல் ஏலம் போன்று நிர்வாகிகளை வாங்கிய எடப்பாடி: அதிமுக பொதுக்குழு குறித்து டிடிவி தினகரன் கடும் விமர்சனம்..!

சென்னை: அதிமுகவை கைப்பற்ற ஐபிஎல் ஏலம் போன்று பல கோடி ரூபாயை கொட்டி நிர்வாகிகளை வாங்கிய போதிலும் நீதிமன்ற உத்தரவால் எடப்பாடி பழனிசாமி நினைத்தது நடக்காமல் போய்விட்டதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டம் அயப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி மேற்கொண்ட யுத்திகளை கடுமையாக விமர்சித்தார். அதிமுக…

ஈபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2440ஆக அதிகரிப்பு

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர்களான 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி உடன் சந்தித்து பேசி வருகின்றனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற வகையில் நீதிமன்றம் வரை சென்று அதனை முறியடித்தார். இதனால், எடப்பாடி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி…

சுயநலவாதிகளால் ஒற்றை தலைமை பிரச்னை தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு புகார்: ‘எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை’

சென்னை: சுயநலவாதிகளால் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுப்பப்பட்டது. நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம் அனுப்பி உள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 12.09.2017 அன்று அதிமுக சட்ட விதிகள் திருத்தப்பட்டு, அதன் மூலம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் துணை விதி 20-கி-ன் படி உருவாக்கப்பட்டன. மேற்கண்ட இரண்டு பதவிகளும்…

அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாகவே அதிமுகவில் யார் ஒற்றை தலைமை என கடும் போட்டி நிலவி வருகின்றது. அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவாரா அல்லது ஓ.பன்னீர்செல்வம் கைப்பற்றுவாரா என கடும் போட்டி நிலவி வருகின்றது.இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் அதிமுகவின் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் காஞ்சிபுரம் தர்காவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர்…

செயல்படாத கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு கோரிக்கை

டெல்லி :  செயல்படாத கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வலியுறுத்தி உள்ளார். மக்களவை, சட்டப்பேரவை உள்ளிட்ட நாட்டின் அனைத்து தேர்தல்களையும் நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின்படி தேர்தல் ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆணையத்தில் பதிவு செய்யும் கட்சிகளுக்கு வருமான வரி சலுகை உள்ளிட்ட சில சலுகைகள் கிடைக்கும். இதற்காக பலர் பெயருக்கு ஒரு கட்சியை…

ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் தான்: ஜெயக்குமார் கடும் விமர்சனம்..!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை, தம்பிதுரை, மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவை வழிநடத்த தலைமையை தேர்ந்தெடுப்பது குறித்து…

பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்க திட்டம்?.. பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது..!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றோரு புறம் இந்த கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர். தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுகவில் எந்த ஒரு கூட்டம் நடத்தவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வேண்டும் என்றும் ஓபிஎஸ்…

ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு சென்றுள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை: ஓபிஎஸ்சின் பொருளாளர் பதவியை பறிக்க திட்டம்?

சென்னை: எடப்பாடி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை, கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஓபிஎஸ் சொந்த ஊரில் இருக்கும்போது இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த இரு வாரங்களுக்கு முன் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. அப்போது, எடப்பாடி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். இதற்கு ஓபிஎஸ்…

சொல்லிட்டாங்க…

* இன்று நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும்போது, அவசர நிலையின் இருண்ட காலத்தை நாமும், எதிர்கால சந்ததிகளும் மறந்துவிட கூடாது. – பிரதமர் நரேந்திர மோடி* மக்களின் கவனத்தை திசை திருப்பும் பிரதமரின் திறமையால், ரூபாயின் பணமதிப்பு வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் போன்ற எதையும் மறைக்க முடியாது. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த பின் ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து,…

அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் வி.கே.சசிகலா: அதிமுக உச்சகட்ட உள்கட்சி பூசலுக்கு இடையே பயணம்..!

சென்னை: அதிமுகவில் உச்சகட்ட உட்கட்சி பூசல் நிலவும் நிலையில் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள வி.கே.சசிகலா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி; தற்போது இந்த பயணம் தொண்டர்களை ஒன்றிணைப்பதற்கான பயணம் என்றும், அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்குவதே நோக்கம் என்றும் தெரிவித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் ஒற்றைத் தலைமை சின்னம்மா என்று முழக்கங்களை எழுப்பினர்.…

1 131 132 133 134 135 161