நெய்வேலி அனல் மின் நிலைய பணியில் தமிழர்கள் புறக்கணிப்பா? திமுக கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களின் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். நெய்வேலி அனல் மின்நிலைய பணி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை, திமுக எம்பி டி.ஆர்.பாலு நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து, டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது: இளநிலை பொறியாளர்கள், தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுவது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முறை இளநிலை பொறியாளர் தேர்வுக்கு 5.97 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 30,816 பேர். இதில் 1.12…









