Browsing: அரசியல்

அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்ப அண்ணாமலை யார்? கே.எஸ்.அழகிரி ஆவேசம்

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்ப அண்ணாமலை என்ன உள்துறை அமைச்சரா? என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கு அண்ணாமலை வேண்டுமானால் அடிமையாக இருக்கலாம். முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக காங்கிரஸ் சார்பில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 9ம்தேதியிலிருந்து 15ம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கி.மீ., நடை பயணம் செய்வதாக…

எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் ஊழல் வழக்கு உலக வங்கியின் விதிகளை மீறி டெண்டரில் முறைகேடு செய்துள்ளார்: விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்; ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.400 கோடி டெண்டர் ஊழல் வழக்கில், விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்றும், உலக வங்கியின் விதிகளை மீறி டெண்டரில் முறைகேடு செய்துள்ளார் என்றும் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், வழக்குத் தொடர்ந்த திமுக சட்டத்துறை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் ரூ.4800 கோடி முறைகேடு நடைபெற்றது குறித்து…

அரியானாவில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ராஜினாமா: பாஜவுக்கு தாவ திட்டம்

சண்டிகர்: அரியானாவில் காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஸ்னோய் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரியானாவில் ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஸ்னோய், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு வாக்களிக்காமல், பாஜ கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு கட்சி மாறி வாக்களித்தார். இதனை தொடர்ந்து கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் அவர் நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை நேற்று அவர்…

சொல்லிட்டாங்க…

* தனி மனிதனின் உரிமையும் மீறப்படக் கூடாது. எந்த சமூகமும் எதன் பொருட்டும் இழிவுபடுத்தப்படக் கூடாது.- முதல்வர் மு.க.ஸ்டாலின்* 2027ம் ஆண்டுக்குள் உத்தரபிரதேசம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையும். – உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத்* பாஜவினருக்கு இந்துக்களின் வாக்குகள் மட்டும் தேவைப்படுகிறது. அனைத்து மக்களின் நலன்தான் எங்களின் லட்சியம். – தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்* ஆன்லைன் சூதாட்டத்தின் தீமைகள் பல பரிணாமங்களை கொண்டவை. அவை தமிழ்ச்சமூகத்தை அழித்துவிடும்.…

‘நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று நாம் சமத்துவம் பேசுவது தேச விரோதமா?’… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

சென்னை: நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று நாம் சமத்துவம் பேசுவது தேச விரோதமா என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்; கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நான் சில நாட்கள் வெளியூர் பயணங்களை தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துரை செய்ததால் என்னால் நேரில் வர இயலவில்லை. ஆனால் இம்மாநாட்டை திருப்பூரில் நடத்துவதாக முத்தரசன் கூறியபோது மகிழ்ந்தேன். மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது…

மேற்கு வங்கத்தில் அமைச்சரவை விரிவாக்கம் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: 8 பேர் புதிய முகங்கள்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான அமைச்சரவையில் நேற்று 5 கேபினட் அமைச்சர்கள் உட்பட 9 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் தொழில்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனால், அவருடைய பதவி பறிக்கப்பட்டு, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த திங்களன்று அறிவித்தார். இதன்படி, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது.…

உரிய நேரத்தில் பயிர் காப்பீடு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வெடால் கிராமத்தில் உள்ள நேரடி அரசு கொள்முதல் நிலையத்திற்கு, விவசாயிகள் நெல்லை கொண்டுவந்து விற்பனைக்காக காத்திருக்கும் போது பெய்த மழையால் நனைந்தும், ஏற்கனவே கொள்முதல் செய்து அடுக்கி வைத்திருந்த ஆயிரக்கணக்கான மூட்டைகளில் நெல் முளைத்துள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் பயிர் காப்பீடு செய்வதற்கு உரிய நேரத்தில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இயற்கையால் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து விவசாயிகள் காக்கப்பட…

சொல்லிட்டாங்க…

இந்தியாவில் ஜனநாயகம் செத்து விட்டது. நான்கு பேரின் சர்வாதிகாரம் மட்டும்தான் தற்போது நாட்டில் நடந்து வருகிறது. :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஎதிர்க்கட்சிகள் இல்லாத சட்டப்பேரவை அமைய 175 தொகுதிகளுக்கான முதல் அடி குப்பத்தில் இருந்து எடுக்கப்படும். :- ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்நாடு வளர்ச்சி பாதையில் செல்வதாக பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால், 20 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் வாழ்கின்றனர். :- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்அரிசிக்கு ஜிஎஸ்டி வரி…

காங்கிரசில் நீக்கப்பட்ட குல்தீப் பிஸ்னோய் பாஜ.வுக்கு தாவல்

புதுடெல்லி அரியானாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட குல்தீப் பிஸ்னோய், தனது மனைவியுடன் பாஜவில் இணைந்தார். அரியானாவில் கடந்த ஜூனில் நந்த மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஸ்னோய், பாஜ கூட்டணி கட்சியின் வேட்பாளருக்கு கட்சி மாறி வாக்களித்தார். இதனால், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இவர் 2 முறை எம்பி.யாகவும், 4 முறை எம்எல்ஏ.வாகவும் இருந்தவர். இவரது மனைவியும் முன்னாள் எம்எல்ஏ. இந்நிலையில், தனது ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை நேற்று முன்தினம்…

சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடியின் மிரட்டலுக்கு காங்கிரஸ் பயப்படாது. மேலும் மேலும் அழுத்தம் கொடுத்தால் எங்களை அடக்கி விடலாம் என நினைக்கிறார்கள். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* இந்தியாவிலேயே முதல் 10 இடங்களில் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் வந்திருப்பது மிகப்பெரிய சாதனை. தமிழ்நாட்டில் உயர்கல்வியின் அடித்தளம் சிறப்பாக இருக்கிறது. – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி* தமிழினத்தின் எதிரிகளும், அந்த எதிரிகளுக்கு விலைபோகும் கூலிகளும் என்னதான் கதறினாலும் கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது. – தமிழக…

1 112 113 114 115 116 161