Browsing: செய்திகள்

ராமநாதபுரம்: “ஆளுநருக்கு மொழிபெயர்ப்பு. பதற்றமாகவும் பெருமையாகவும் உள்ளது!”- சிலிர்க்கும் மாணவர் | The student who translated the Governor’s speech in Tamil shares his experience

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பள்ளி மாணவர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன்படி தேவிபட்டினத்தில் நடந்த மீனவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி ஆங்கிலத்தில் பேசியதை மீனவர்களுக்குப் புரியும் வகையில் பள்ளி மாணவரான விவேகபாரதி தமிழில் மொழிபெயர்த்துக் கூறினார். மேடையில் நடுக்கத்துடன் நின்ற மாணவனை அருகில் அழைத்துப் பேசி, பதற்றத்தைப் போக்கி, மொழிபெயர்க்க வைத்தார் ஆளுநர். அவர் பேசிய அடுத்த விநாடியே அவர் என்ன பேசினார்…

இலங்கை குரங்குகளை கோரியதா சீனா? சீன தூதரக பதிலில் உள்ள உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையிலுள்ள ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவது தொடர்பில் தற்போது இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவிற்கு ஒரு லட்சம் குரங்குகள் அனுப்புகின்றமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேலும் சில நாடுகளிடமிருந்தும் குரங்குகளை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக விவசாய அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவிற்கு குரங்குகளை அனுப்ப காரணம் என்ன?இலங்கையில்…

பெண்களுக்கு 7.5% வட்டி விகிதம்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்

பெண்கள் தங்களுக்காகவோ அல்லது பெண்குழந்தைகளின் சார்பில் பாதுகாவலரோ இத்திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது Source link

`ஆளுநரோ, ஆண்டவனோ… தப்புதான்; ஓபிஎஸ் நல்ல அமைச்சர்’ – ஆளுநர் செலவினங்கள் விவாதத்தில் நடந்தது என்ன?! | Tamilnadu assembly Highlights: The Government Code is the same for all, says minister

அது அவர்களின் உரிமையாக இருக்கலாம். ஆனால், நமது கடமை நிதித் துறை விதியை (Finance Code) பின்பற்றுவது. அதன் அடிப்படையில் மூன்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.1. அதில் எந்த துறையாக இருந்தாலும், செலவு செய்யப்படாத தொகை திரும்ப பெறப்பட மாட்டாது. எனவே ஐந்து கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆளுநர்  செலவினங்களை இந்த ஆண்டு மூன்று கோடியாக குறைத்து இருக்கிறோம். காரணம், கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட இரண்டு கோடி நிதி அவர்கள் செலவு செய்யாமல் இருக்கின்றனர்.2. ஆளுநர்  நிதிகள் கணக்கில் வராமல்…

உத்தரப்பிரதேசம் மலியானாவில் 72 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட வழக்கு: ஒருவருக்கும் தண்டனை கிடைக்காதது எப்படி?

பட மூலாதாரம், AFPகட்டுரை தகவல்1987, மே 23 அன்று தனது ஆறு வயது மகளுடன் மீரட்டில் உள்ள மலியானா கிராமத்தின் புறவழிச்சாலையில் முன்னா ஓடும்போது, ஒரு தோட்டா அவரது மகளின் நெற்றியைத் துளைத்தது. என்ன நடக்கிறது என்று முன்னா புரிந்துகொள்வதற்குள், மற்றொரு தோட்டா அவர் மார்பில் தாக்கியது. தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். “இதை மீரட்டின் மலியானா கிராமத்தில் வசிக்கும் முகமது யாகூப் விவரிக்கும்போது, கண்முன்னே நடப்பது போல் உள்ளது. இது நடந்த போது…

உங்களை விட எங்களுக்கு சம்பளம் குறைவு தான்…. சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பதில்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்தக்கோரிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் வேண்டுகோள் விடுத்தார்.மனிதவளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை உயர்த்த வேண்டும் எனவும், ஒன்றிய தலைவர்களுக்கு கார் வழங்கப்படுவதை போன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்க வேண்டும் எனவும்  கோரிக்கை விடுத்தார்.இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  சட்டமன்ற உறுப்பினர்களை காட்டிலும், அமைச்சர்களுக்கு மாத ஊதியம் குறைவாக வழங்கப்படுவதை…

சேலம்: மனைவிக்கு 2.18 லட்சம் 10 ரூபாய் நாணயங்களாக ஜீவனாம்சம் வழங்கிய கணவன் – Husband paid alimony to wife in Rs 2.18 lakh with 10 rupees coins

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜீ, சாந்தி தம்பதி. ராஜீ தனியார் நிறுவனம் ஒன்றில் கேஷியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சாந்தி விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்தார்.சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, சாந்திக்கு மாதந்தோறும் ரூ. 3000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்தத் தொகையை ராஜீ சரியாகக் கொடுக்காததால் மீண்டும் சங்ககிரி கோர்ட்டில் சாந்தி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி,…

அதிக் அகமது, அஷ்ரஃப்: நேரலை கேமராக்களுக்கு முன் நடந்த படுகொலை – உத்திரபிரதேச காவல்துறை மீது எழுப்பப்படும் கேள்விகள்

பட மூலாதாரம், NURPHOTO33 நிமிடங்களுக்கு முன்னர்”இரண்டு வாரங்களுக்குள் உங்களை ஏதோ ஒரு சாக்குப்போக்கு சொல்லி மீண்டும் சிறையில் இருந்து வெளியே அழைத்துச் சென்று உங்களை முடித்துவிடப்போவதாக இன்று அலகாபாத்தில் எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த தகவலை ஒரு மூத்த அதிகாரி எனக்கு தெரிவித்தார்.”அதிக் அகமதுவுடன் கொல்லப்பட்ட அவரது சகோதரர் அஷ்ரஃப், மார்ச் 29 ஆம் தேதி போலீஸ் காருக்குள் இருந்து எட்டிப்பார்த்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, இந்த அச்சத்தை வெளிப்படுத்தினார்.சரியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஏப்ரல்…

முல்லைப் பெரியாறு விவகாரம்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி, முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க கேரளா அரசு தடையாக உள்ளது என்று வாதிட்டார்.அணை உள்ள பகுதிக்கு பெரிய கருவிகளை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுவதால், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறினார். மேலும், அணை பாதுகாப்பு குறித்து கேரளாவைச் சேர்ந்த தனி நபர்கள் சிலர் தாக்கல் செய்த வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்று…

“இன்று பில்கிஸ் பானு… நாளைக்கு நீங்களோ, நானோ” – விடுதலை செய்தது எப்படி என உச்ச நீதிமன்றம் கேள்வி! | Supreme court rise firing question against Gujarat govt on bilkis bano case

அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கின்மீதான இன்றைய விசாரணையின்போது, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு குஜராத் அரசை சரமாரியாகக் கேள்விகேட்டது.அதில், “கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சிலர் கொலைசெய்யப்பட்ட வழக்கை, பிரிவு 302-ன் கீழ் வரும் சாதாரண கொலை வழக்குடன் நீங்கள் ஒப்பிட முடியாது. ஆப்பிளை எப்படி ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாதோ, அதுபோல படுகொலையை, சாதாரண கொலையுடன் ஒப்பிட முடியாது.உச்ச நீதிமன்றம் Source link

1 358 359 360 361 362 530