அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் விளக்கம்: “நான் பேசியதாக பகிரப்படும் ஆடியோ ‘போலி’, மெளனம் காக்க இதுதான் காரணம்”
படக்குறிப்பு, பிடிஆர் தியாகராஜன், தமிழ்நாடு நிதியமைச்சர்6 மணி நேரங்களுக்கு முன்னர்அடையாளம் தெரியாத நபருடன் தான் பேசியது போல சமூக ஊடகங்களில் வைரலான ஆடியோ ‘போலி’ என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன். சில தினங்களுக்கு முன்பு பிடிஆர் தியாகராஜன் ஒருவருடன் செல்பேசியில் பேசுவதாகக் கூறி பகிரப்பட்ட ஆடியோவில், “உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை…









