நெல்லை: “எங்களால் பராமரிக்க இயலவில்லை..!” – 90 வயது மூதாட்டியை உயிரோடு எரித்த பேத்திகள் கைது! | granddaughters were arrested for immolating their grandmother
அதையடுத்து, போலீஸார் மாரியம்மாள் மற்றும் மேரியை பிடித்து விசாரித்தபோது, பாட்டி சுப்பம்மாளை அங்கு அழைத்து வந்து அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததை ஒப்புக் கொண்டனர். பாட்டி சுப்பம்மாளின் மூத்த மகள்களான தங்களது பராமரிப்பில் பாட்டி இருந்ததாகவும், அவரைப் பராமரிக்க முடியாமல் திணறியதால் எரித்துக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மேரி, மாரியம்மாள்சுடுகாட்டுப் பகுதியில் கொண்டு சென்று எரித்துவிட்டால் யாருக்கும் தெரியாமல் போய்விடும் என்பதற்காக அந்த இடத்தைத் தேர்வு செய்ததாக கைது…