சீனாவுக்காக இந்தியாவை ரஷ்யா பகைத்துக்கொள்ளுமா? – BBC News தமிழ்
ரஜ்னீஷ் குமார்பிபிசி செய்தியாளர்42 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesமோடி அரசின் தவறான வியூகத்தால் சீனாவும் பாகிஸ்தானும் தோளோடு தோள் சேர்ந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 2ஆம் தேதி மக்களவையில் தெரிவித்திருந்தார்.குறிப்பாக, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பின்பற்றப்படும் தவறான உத்தியால் சீனா-பாகிஸ்தான் ஒன்றிணைந்துள்ளதாகவும், இந்திய மக்களுக்கு எதிராக அரசாங்கம் பெரிய குற்றத்தைச் செய்துள்ளதாகவும் மோடி அரசு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். யுக்ரேன் நெருக்கடி ரஷ்யாவையும் சீனாவையும் ஒன்றாக இணைத்துள்ளது என்றும் இப்போது கூறப்படுகிறது. தற்போதைய…