திருமணப் பதிவை பாதிக்கும் மெஹந்தி… பயோமெட்ரிக் பதிவுக் குழப்பத்தால் மணமக்கள் அவதி!
மெஹந்தி திருமண நிகழ்வின் ஓர் அங்கம். மை பூசிய கண்ணும், மருதாணி பூசிய கையும் மணப்பெண்ணை ஸ்பெஷலாக காட்டும். ஆனால், பயோமெட்ரிக் முறையிலான கைரேகை பதிவு, திருமணங்களின் போது மருதாணி போடுவதைத் தடுக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? மேற்கு வங்க ரெஜிஸ்டர் அலுவலகங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு ஜோடிகளின் விரல்கள் ஆதாரத்திற்காக ஸ்கேன் (பயோமெட்ரிக் ரெஜிஸ்ட்ரேஷன்) செய்யப்படுகிறது. திருமண ஜோடி அப்ளிகேஷன் கொடுக்கும்போதும், அப்ளிகேஷன் கொடுத்த ஒரு மாதத்திற்குப் பின்னர் நடைபெறும் திருமணத்திலும் என இரண்டு முறை இந்த…