Doctor Vikatan: பிறந்த குழந்தையையும் பாதிக்குமா ரத்தம் உறையாத பிரச்னை… நிரந்தர தீர்வு உண்டா?
Doctor Vikatan: என் தோழியின் ஆண் குழந்தைக்கு 2 வயதாகிறது. அவனுக்கு ரத்தம் உறையாத பிரச்னை இருப்பதாக மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா.ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை.ரத்தம் உறையாத தன்மையால் ஏற்படுவது ‘ஹீமோஃபீலியா’ எனப்படும் ஒருவித பிரச்னை. ஆண்களை மட்டுமே பாதிக்கக்கூடிய நோய் இது. இது தவிர மூட்டுகளில் ரத்தம் சேரும் ‘ஹீம்ஆர்த்ரோசிஸ்’ என்றொரு பாதிப்பும்…





