Browsing: ஆரோக்கியம் | Health

கண்ணீர் துடைக்க; கட்டிப்புடி வைத்தியம் செய்ய ஆண்கள் வாடகைக்கு… ஜப்பானில் புதிய சேவை..! | People Renting Handsome Weeping Boys To Wipe Away Tears

இந்தச் சேவையை நிறுவிய ஹிரோகி டெராய், “உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும்போது அதனை பொறுத்துக் கொள்வதை மட்டும் செய்யாமல், தழுவி அரவணைக்கப்பட வேண்டும் என நினைக்கிறன். ஜப்பானியர்கள் வீட்டில் மட்டுமல்ல, பணியிடத்திலும் கண்ணீர் சிந்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் வேலையில் அழும்போது, மிகவும் எதிர்மறையான கருத்து உருவாகலாம். சக ஊழியர்கள் கூட உங்களை அணுகத் தயங்கலாம்.அழுகை (சித்தரிப்பு படம்)pixabayதொழில்சார் சூழல்களில் பாதிப்பை ஏற்றுக்கொள்வது எமோஷனல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். இது பொது இடங்களில் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் உள்ள சமூக…

`இந்திய இளைஞர்களின் திடீர் மரணம்’… கோவிட் தடுப்பூசி காரணமா?! – விளக்கும் ஆய்வு தகவல்!|Research found the reason for young Indians sudden death

புதிதாக தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்போது அதனை செலுத்திக் கொள்ளலாமா வேண்டாமா என்ற அச்ச உணர்வு பெரும்பாலான மக்களிடையே எழும். இதுதான் கோவிட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட போதும் நிகழ்ந்தது.இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டு விடுமோ, உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்து உண்டாகுமோ என்றெல்லாம் மக்கள் அச்சப்பட்டனர். சிலர் அரசின் கட்டாய அறிவிப்பு வரும் வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்தார்கள். இன்று வரை கூட சிலர் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கலாம். Corbevax vaccine for COVID-19 (Representational Image)2021…

“15 சிகரெட்டுகளை விட மோசமானது தனிமை” எச்சரிக்கும் மருத்துவர்… தீர்வு என்ன? I Solution for Loneliness, a global health threat

தனித்து வாழ்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த விவேக் மூர்த்தி என்ற மருத்துவர் தனிமை பற்றி சமர்ப்பித்த தனது அறிக்கையில், “தனிமை என்பது மோசமான ஓர் உணர்வு. அது தனிப்பட்ட மற்றும் சமூக ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. இதயநோய், டிமென்ஷியா, பக்கவாதம், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.ஒரு நாளைக்கு 15 சிகரெட்டுகள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பை தனிமை உருவாக்குகிறது. இது உலகளாவிய அச்சுறுத்தலாக உருமாறி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.இதுபற்றி பேசியுள்ள…

Doctor Vikatan: காய்ச்சல் குணமானாலும் விடாமல் விரட்டும் இருமல்… என்னதான் தீர்வு?

Doctor Vikatan: கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எனக்கு வைரஸ் காய்ச்சல் வந்தது. மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டதில் காய்ச்சலும் ஜலதோஷமும் குணமாகிவிட்டன. ஆனால் ஒரு மாதமாகியும் இருமல் மட்டும் விட்டபாடாக இல்லை. இருமல் மருந்து எடுத்துக்கொண்டும் பலனில்லை. இதற்கு என்ன காரணம்…. இருமலுக்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்பொது மருத்துவர் அருணாசலம்சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் கடல்காற்று 12 மணியிலிருந்தே வீச ஆரம்பிக்கிறது. அதனால் நகரத்தில் குளிர்ச்சியான ஒரு சூழல் நிலவுகிறது.சூடான காற்றுதான் மேல்நோக்கிப்…

“நீங்கள் இதைப் படிக்கும்போது நான் இறந்திருப்பேன்” – கேன்சரால் இறந்த பெண்ணின் கடைசி ஆசை! | Caner patient lost wish to eradicate the medical debt

தன்னால் இயன்ற உதவியை பிறருக்குச் செய்ய வேண்டும் என்று நினைத்த கேசி, அவர் கணவர் வெளியிட்ட சோஷியல் மீடியா பக்கத்தில் தனது ஃபாலோயர்களிடம், `எனது வாழ்வைக் கொண்டாடும் விதமாக பிறரின் மருத்துவ கடனை வாங்க திட்டமிட்டு இருக்கிறேன். அந்தக் கடனை நான் அடைக்க உள்ளேன்’ என்று கூறியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட பதிவில், “இதை நீங்கள் படிக்கும்போது நான் இறந்திருப்பேன். நான் உங்கள் ஒவ்வொருவரையும் என் முழு மனதுடன் நேசித்தேன், நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்’’…

Doctor Vikatan: சிறுநீர் கழிக்காமல் அழும் குழந்தை… சிறுநீர் துவார அடைப்புக்கு ஆபரேஷன்தான் தீர்வா? | Crying baby without urinating; Is surgery the solution?

ஆண்குறியின் முன்தோல் (foreskin) துவாரம் சிறியதாக இருப்பது, அடைப்பு  (Phimosis)   ஏற்படவும், சிறுநீர்க் கிருமித் தொற்று ஏற்படவும், பொதுவான காரணமாக இருக்கும். அறுவை சிகிச்சைமாதிரிப் புகைப்படம்இந்தப் பிரச்னையை முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை (Circumcision) எனப்படும் எளிய சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். அடிக்கடி சிறுநீர்த் தொற்று பிரச்னை ஏற்பட்டாலோ, அடைப்பு  (Tight Phimosis) அதிகமாக இருந்தாலோ மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில்…

பயமும் வேண்டாம்… அலட்சியமும் வேண்டாம்… காமத்துக்கு மரியாதை| சீஸன் 4 – 121

இன்றைக்கு உடல்நலம் மற்றும் மருத்துவம் தொடர்பாக கிட்டத்தட்ட எல்லோருக்குமே நிறைய விஷயங்கள் தெரிகின்றன. எல்லாம் கூகுள் டாக்டர் உபயம்தான். ஆனால், அவர்களுக்குத் தெரிந்த தகவல்கள் அத்தனையும் நூறு சதவிகிதம் உண்மை என்று சொல்ல முடியாது. நாள்பட்ட இருமல் என்று டைப் செய்தால், ‘தொண்டை புற்றுநோயாக இருக்கலாம்’ என்று பயம் காட்டி விடுகிறது கூகுள். இதனால் இல்லாத பிரச்னைகளை இருப்பதாக நினைத்துக்கொண்டு, பலரும் பயத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.Dr.…

Doctor Vikatan: நெல்லிக்காய் ஜூஸ் கொடுத்தால் சளி பிடிப்பதேன்? | Is drinking amla juice the reason for getting cold?

Doctor Vikatan: என் இரண்டு குழந்தைகளுக்கும் முறையே 5 மற்றும் 7 வயதாகிறது. அவர்களுக்கு நாங்கள் அடிக்கடி நெல்லிக்காய் ஜூஸும், நெல்லிக்காய் சாதமும் கொடுப்பதுண்டு. நெல்லிக்காய் ஜூஸில் ஐஸ் சேர்க்காமல்தான் கொடுக்கிறோம். அவற்றைக் கொடுக்கும்போதெல்லாம் குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. அதுவே ஆரஞ்சு, எலுமிச்சைப் பழங்கள் கொடுக்கும்போது இந்தப் பிரச்னை இல்லை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஸ்ரீமதி வெங்கட்ராமன்நீங்கள் நெல்லிக்காய் கொடுப்பதற்கான காரணம், பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவே இருக்கும் என்பதாக நான் புரிந்துகொள்கிறேன். Source…

1 27 28 29 30 31 211