`முதல்முறையாக வடகொரியாவில் கொரோனா தொற்று’ நாடு முழுவதும் ஊரடங்கு அமல்! – கிம் ஜாங் உன் உத்தரவு | North Korea president leader Kim Jong Un orders nationwide lockdown, after confirm of first corona case
2019 ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியதிலிருந்து, வடகொரியா நேற்றுவரை, தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லையென்று கூறிவந்தது. அதுமட்டுமல்லாமல் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வடகொரியாவின் 2020 ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட 13,259 கொரோனா பரிசோதனை முடிவுகளும் அவ்வாறே இருந்தது. தற்போது, கொரோனா வைரஸும் உருமாற்றம் அடைந்து, டெல்டா ஓமைக்ரான் வகை என பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகளவில் பரவத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், வடகொரியாவில் நேற்றுவரை ஒருவருக்கு கூட கொரோனா…