Browsing: ஆரோக்கியம் | Health

உடலுறவுக்கு பின் Copper ‘T’ பயன்படுத்தினா Pregnancy-ஐ Avoid பண்ணலாமா? – Dr Jeyarani Kamaraj Explains I Usage of Emergency Contraceptive to avoid unwanted Pregnancy

Here in this video Dr Jeyarani Kamaraj from Aakash Fertility Centre talks about the Emergency Contraception in detail. She tells about the types of contraceptive methods, when to use them, the side effects, risks involved etc.தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

Doctor Vikatan: கர்ப்பகாலத்தில் ஏற்படும் சரும மாற்றம்; இயல்பானதா? I Is it normal to have Pigmentation during Pregnancy?

நான் 6 மாத கர்ப்பமாக இருக்கிறேன். இதுவரை எனக்கு சருமத்தில் பருக்களோ, கருந்திட்டுகளோ வந்ததில்லை. ஆனால் கர்ப்பமான பிறகு முகத்திலும் உடலின் சில பகுதிகளிலும் கருந்திட்டுகள் காணப்படுகின்றன. இது எனக்கு கவலையாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் சரும பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் எடுக்கலாமா? இந்தக் கரும்புள்ளிகளைப் போக்க என்ன வழி?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்கர்ப்ப காலத்தில் முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் இது போன்று கருந்திட்டுகள் வருவது இயல்புதான். இதை ஆங்கிலத்தில்…

Doctor Vikatan: எத்தனை முறை பல் துலக்கினாலும் விலகாத வாய் துர்நாற்றம்; பிரச்னையின் அறிகுறியா? I Bad Breath Reasons and Solutions

சொத்தைப் பற்கள் இருந்தாலும், சொத்தையின் காரணமாக சீழ் கட்டியிருப்பது போன்றவற்றாலும் வாய் துர்நாற்றம் இருக்கலாம்.பல் ஈறுகளில் சிலருக்கு இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். ஈறுகளிலிருந்து ரத்தம் கசியலாம். Gingivitis எனப்படும் ஈறு அழற்சியோ, Periodontitis எனப்படும் ஈறுநோயோ இருந்தாலும் வாய் துர்நாற்றம் இருக்கும்.உங்களுக்கு உமிழ்நீர் சரியாகச் சுரக்கிறதா என்று கவனியுங்கள். உமிழ்நீர்தான் வாயிலுள்ள அழுக்கு, பாக்டீரியா கிருமிகள் போன்றவற்றை வெளியேற்றுவது. உமிழ்நீர் சுரக்காத `ஸெரஸ்டோமியா'( Xerostomia) பாதிப்பும் வாய்துர்நாற்றத்துக்கு ஒரு காரணம்.எனவே, நீங்கள் பல் மருத்துவரை அணுகி, முழுமையான வாய்…

நரம்பு சுருட்டி இழுக்கும் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை; வெல்வது எளிது!

நரம்பு சுருட்டி இழுக்கும் பிரச்னை என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னையை பலரும் அனுபவித்திருப்போம். இந்தியாவில் இந்த பாதிப்பு மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு கோடி பேர் இந்தப் பிரச்னைக்கு ஆளாகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள்.Varicose veinsநீண்டநேரம் நின்றுகொண்டே பணியாற்றும் ஆசிரியர்கள், போஸ்ட்மேன், செவிலியர்கள், மருத்துவர்கள், சமையல் கலைஞர்கள், மார்கெட்டிங், கட்டுமானத் தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் போன்றோரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதே சமயம், இதுபோன்ற பணியில் ஈடுபடாதவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம்.…

Doctor Vikatan: அசுத்தமான இடங்களைக் கடக்கும்போது எச்சிலைத் துப்பாமல் விழுங்குவது சரியானதா?-Should we spit or swallow saliva while crossing dirty places?

அசிங்கமான இடங்களைக் கடக்கும்போதும், துர்நாற்றங்களை சுவாசிக்கும்போதும் எனக்கு உடனே எச்சில் துப்பத் தோன்றும். அந்த நேரத்தில் சுரக்கும் எச்சிலை அப்படி துப்புவது சரியானதா? அந்த எச்சிலை விழுங்கினால் கிருமிகள் உடலுக்குள் போய்விடுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.பொதுவாகவே எந்தப் பொது இடத்திலும் வெளியிடத்திலும் எச்சில் துப்புவது சரியானதில்லை. இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதுதான் சிறந்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல அசுத்தமான இடங்களைக் கடக்கும்போதும், துர்நாற்றங்களை சுவாசிக்கும்போதும் எச்சில் துப்பத் தோன்றும் உணர்வு என்பது…

நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தைக்கு நிறக்குருடு பாதிப்பு ஏற்படலாம்! கண்கள் பத்திரம் – 17- Marriage within close relations may cause color blindness.

விழித்திரையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். RPE65 எனப்படும் மரபணுவில் பிறழ்வு இருப்பது கண்டறியப்பட்டால் `லக்ஸ்டர்னா’ ( Luxturna) எனப்படும் ஜீன் தெரபியின் மூலம் குணப்படுத்த முடியும். எந்த மரபணுவில் பிரச்னை உள்ளதோ, அதை அடினோவைரஸின் வெக்டாரின் உள்ளே நுழைத்து, அது விழித்திரையின் அடியில் ஊசியாகச் செலுத்தப்படும். இதன் மூலம், கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ள இருக்கும் செல்களுக்கு இது உயிரூட்டி, அவற்றைப் புத்துணர்வு பெற வைக்கும். இதுதான் இந்தச் சிகிச்சையின் அடிப்படை. ஆனால்,…

கேரளாவில் பரவும் புதுவித வெஸ்ட் நைல் காய்ச்சல், ஒருவர் பலி; சுகாதாரத்துறை எச்சரிப்பது என்ன?

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பரவும் ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சலால் 47 வயது நபர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு மே 17-ம் தேதி காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகள் ஏற்பட்டது. பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பின், இறுதியாக திருச்சூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.Feverஅங்கு அவருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சை பயனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, கேரள…

Doctor Vikatan: எடைக்குறைப்புக்கு உதவுமா திரவ உணவுப்பழக்கம்?-will liquid diet help to loose weight?

நீங்கள் செய்ய வேண்டியவையும் தவிர்க்க வேண்டியவையும்!உணவுக்குப் பதில் திரவங்களை எடுத்துக்கொள்ளாதீர்கள். அது ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு காரணமாகும்.திரவ உணவுகளில் அதிகப்படியான உப்போ, சர்க்கரையோ சேர்க்க வேண்டாம்.அதிக கெட்டியான கஞ்சி, மில்க் ஷேக் போன்றவை எடையை அதிரிக்கச் செய்யலாம்.நீர்க்க உள்ள பால், மூலிகை டீ, இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ், கிளியர் சூப் போன்றவை எடைக்குறைப்புக்கு உதவும்.உடல் எடை குறைக்கும் உணவுகள்யாருக்கு கூடாது?நீரிழிவு இருந்தால் காய்கறிகளையும் பழங்களையும் அப்படியே சாப்பிடுங்கள். ஜூஸாக எடுத்துக்கொள்வது ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.சிலருக்கு அதிக…

Doctor Vikatan: குழந்தைகளுக்கு மீன் எண்ணெய் மாத்திரை கொடுக்கலாமா?-Can we give fish oil tablets for kids?

சைவ உணவுப்பழக்கமுள்ள குழந்தைகளுக்கு மீன் எண்ணெய் மாத்திரைகள் கொடுக்கலாமா? அந்த மாத்திரைகளின் பயன் என்ன?கண்ணன் (விகடன் இணையதளத்திலிருந்து…)பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்மீன் எண்ணெயில் Eicosapentaenoic Acid (EPA) and Docosahexaenoic Acid (DHA) என்கிற இரண்டு வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த இரண்டும் குழந்தைகளின் நரம்பியல் மண்டல ஆரோக்கியத்துக்கும், ஐக்யூ முன்னேற்றத்துக்கும் உதவும்.ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் இதுபோன்ற அசைவ ஊட்டச்சத்து சப்ளிமென்ட்டுகளைதான்…

மாதவிடாய் சுகாதார தினம் – அறியவேண்டிய விழிப்புணர்வு தகவல்கள்! I Visual Story

Periodsஆண்டுதோறும் ‘மாதவிடாய் சுகாதார தினம்’ மே மாதம் 28-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம். Stomach Painபெண்கள் தங்களது ஆயுட்காலத்தில், 2,555 நாள்கள் (ஏறக்குறைய 7 ஆண்டுகள்) மாதவிடாய் நாள்களை எதிர்கொள்கின்றனர்.Sanitary Napkinமாதவிடாய் நாள்களில் நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும். குறைந்தபட்சம், ஒரு நாளில் மூன்று முறையாவது மாற்ற வேண்டியது கட்டாயம்.Inner wearஉள்ளாடைகள் அணிவதில் கவனமாக…

1 196 197 198 199 200 211