“கேப்டன் ரோஹித் சர்மாவின் திறமையான கூர்மையான தலைமையின் கீழ் இந்தியா தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது, இறுதிப்போட்டிக்கான வழியில் 4 உறுதியான வெற்றிகளை பதித்தது.” என சாம்பியன்ஸ் டிராபியின் முக்கிய போட்டிகளை ஹைலைட் செய்துள்ளது பிசிசிஐ.
இந்த 58 கோடியில் 15 பேர் அணியில் ஒவ்வொரு வீரருக்கும் 3 கோடி கிடைக்கும் என டைம்ப்ஸ் ஆஃப் இந்தியா தளம் கூறுகின்றது. இதுமட்டுமல்லாமல் ஐசிசி வழங்கிய 20 கோடி தொகையையும் வீரர்களுக்கு பகிர்ந்தளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
BCCI தலைவர் கருத்து
பிசிசிஐ தலைவர் ரோஜெர் பின்னி, “அடுத்தடுத்து ஐசிசி கோப்பைகளை வெல்வது சிறப்பானது. இந்த பரிசு அணியின் அர்ப்பணிப்பையும் சிறப்பையும் உலக அரங்குக்கு எடுத்துக்காட்டும்.

திரைக்கு பின்னர் இருந்து கடின உழைப்பை செலுத்தியவர்களுக்கும் பரிசுத் தொகை சென்று சேரும்.