`ரோஹித் (கேப்டன்), கில் (துணைக் கேப்டன்), கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, ரிஷப் பண்ட், ஜடேஜா”
இதுதான் 15 பேர் பட்டியல். இதில், கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை ஆடிய இந்திய அணிக்கும், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணிக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. 2023 உலகக் கோப்பை அணியிலிருந்த அஷ்வினுக்குப் பதில் வாஷிங்டன் சுந்தர், சிராஜுக்குப் பதில் அர்ஷதீப் சிங், இஷான் கிஷனுக்குப் பதில் ஜெய்ஸ்வால், எக்ஸ்ட்ராவாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

மற்றபடி சூர்யகுமார் யாதவ் சாபின்யன்ஸ் டிராபி அணியில் கிடையாது. இப்போது கேள்வியே, உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை அணியில் எடுக்க முடியாத அளவுக்கு இந்திய அணி வீரர்கள் அனைவரும் அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்களா? ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாக அணியில் தேர்வு செய்யப்பட்டிருப்பது நியாயமே. ஆனால், ஹர்திக் பாண்டியா ஏற்கெனவே துணைக் கேப்டனாக அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு கில்லை எதற்காகத் துணைக்கு கேப்டனாக நியமித்தார்கள் என்பது புதிராகவே இருக்கிறது.