BCCI: இந்திய வீரர்களுக்கு வைர மோதிரத்தை பரிசாக அளித்த பிசிசிஐ! – விவரம் என்ன? | BCCI Gifts Diamond ring for Worldcup winners

Share

நமன் விருதுகள் என்ற பெயரில் இந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் பிசிசிஐ விருது விழாவை நடத்தியிருந்தது. முன்னாள் வீரர் சச்சின், சமகாலத்தில் உலக கிரிக்கெட்டை கலக்கி வரும் பும்ரா ஆகியோருக்கு விருதை வழங்கி சிறப்பித்திருந்தது. இந்த நிகழ்வில்தான் பிசிசிஐ சார்பில் 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு வைர மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது.

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியின் கடைசி ஓவர் வரை போராடி தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தியிருந்தது. இதனை கொண்டாடும் வகையில்தான் பிசிசிஐ அந்த அணியின் அத்தனை வீரர்களுக்கும் வைர மோதிரத்தை பரிசாக கொடுத்திருக்கிறது. அந்த வைர மோதிரத்தில் குறிப்பிட்ட அந்த வீரரின் பெயர், ஜெர்சி நம்பர் மற்றும் அந்த உலகக்கோப்பையில் அவர்களின் செயல்பாடுகளை பற்றிய புள்ளிவிவரங்களும் இருக்கும்படி செய்திருக்கிறார்கள்.

உலகக்கோப்பையை வென்ற சமயத்திலேயே 125 கோடி ரூபாயை இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com