BB Tamil 8 : 'பிடிக்கலைனா பிடிக்கலைன்னு சொல்லிறனும்; அந்த ரிலேஷன்ஷிப்..!' – விஷால் குறித்து தர்ஷிகா

Share

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 103- வது நாளுக்கான ( ஜனவரி 17) இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

கடந்த அக்டோபர் 6 -ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வர இருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. கடந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அருண் மற்றும் தீபக் எவிக்ஷன் செய்யப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த முறை பணப்பெட்டி டாஸ்க்கில் ட்விஸ்ட் வைக்கப்பட்டிருந்தது.

தர்ஷிகா
தர்ஷிகா

குறிப்பிட்ட நேரத்திற்குள் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் வராத போட்டியாளர் எவிக்ஷன் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் ஜாக்குலின் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் போட்டியாளர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இன்று ( ஜனவரி 17) வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில் தர்ஷிகா, விஷால் குறித்து சௌந்தர்யாவிடம் மனமுடைந்து பேசுகிறார். “எல்லாரும் இந்த வீட்டில ஜாலியா இருக்காங்க… ஆனா என்னால அப்படி இருக்க முடியல. ஒருத்தரை பிடிக்கலைனா பிடிக்கலைன்னு சொல்லிறனும். சின்னதாக ஒரு விஷயம் செய்தால் கூட ஒரு நம்பிக்கை வந்திடும்.

விஷால் - அன்ஷிதா
விஷால் – அன்ஷிதா

இந்த வீட்டில நான் ரொம்ப ஸ்பெஷல் ஆன நபர்னு சொல்லிருக்கான். அவன் எனக்கு ஆக்க்ஷன் மூலமா சொல்லலனா நான் ஏன் அப்படி பண்ணிருக்க போறேன். நான் போய் சொல்லி அவன் NO சொன்ன மாதிரி ஒரு பிம்பம் கிரியேட் ஆயிருச்சு. உண்மைய சொல்லனும்னா அந்த ரிலேஷன்ஷிப் ப்ரெண்ட்ஷிப்பே கிடையாது” என்று தர்ஷிகா பேசியிருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com