IPL: “தரமான வீரர்களை பிற அணிகள் எடுப்பது பொறாமையாகத்தான் இருக்கும். ஆனால்.!”- ஸ்டீபன் பிளெமிங்|“Watching quality players being picked up by other teams does make you feel envious. But…!” — Stephen Fleming
19-வது ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நேற்று (டிச.16) அபுதாபியில் நடைபெற்றது. எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் அதிகமாக எடுத்திருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், ” சில சமயங்களில் கடந்த கால வெற்றிகளை வைத்து சில கோட்பாடுகளையும், தத்துவத்தையும் மாற்றாமல் அதனை பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்போம்.மாற்றம் அவசியம்அதனால் இந்த முறை மாற்றம் அவசியம் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.…









