Eng vs Ind : 'அதனால மட்டும்தான் 'டிரா' கேட்டேன்!' – காரணம் சொல்லும் ஸ்டோக்ஸ்!
‘டிராவில் முடிந்த போட்டி…’இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடந்த நான்காவது போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் பெர்பார்மென்ஸே போட்டியை இங்கிலாந்தின் கையிலிருந்து பறித்தது. சதம் மற்றும் 5 விக்கெட் ஹாலை எடுத்திருந்த இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸூக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருதை வாங்கிவிட்டு அவர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.Stokes’முயற்சி திருவினையாக்கும்…’ஸ்டோக்ஸ் பேசியதாவது, ‘ஒரு ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்படும் சமயத்தில் போட்டியின் முடிவு எப்படி சென்றிருக்கிறது என்பதும் முக்கியம்.…