குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட ஃபரூக் அப்துல்லா மறுப்பு… ஜம்மு – காஷ்மீரின் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பு தேவை என விளக்கம்!!
டெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்று தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 7 மாநில முதல்வர்கள் உட்பட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதினார். இதன்படி, மம்தா தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது.…









