ரஷ்யா குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பற்றி ஜெர்மனி, போலந்து தலைவர்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ரஷ்யாவுடனான தனது உறவை இந்தியா குறைக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றனகட்டுரை தகவல்ஜனவரி 12ஆம் தேதியன்று ஆமதாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெர்மன் அதிபரும் பிரதமர் மோதியும் கலந்துகொண்டனர். அதேபோல, போலந்து வெளியுறவு அமைச்சரும் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இதன் மூலம் உலக நாடுகள் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பதற்கான சில முக்கிய சமிக்ஞைகள் கிடைத்துள்ளன.ஏப்ரல் 2022இல் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்…









