ரோஹித் 8 ரன்களில் ஹேசல்வுட்டின் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆக, கோலி ஸ்டார்க்கின் பந்தில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற டெலிவரியில் பேட்டை விட்டு டக் அவுட் ஆனார். பவர்ப்ளேக்குள்ளாகவே ரோஹித், கோலி, கில் என மூன்று பேரின் விக்கெட்டையும் ஆஸ்திரேலிய பௌலர்கள் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய பௌலர்கள் இந்திய அணியின் டாப் ஆர்டர் மொத்தத்தையும் வீழ்த்த, இந்திய அணிக்கு மொமண்டமே கிடைக்கவில்லை. இடையே நான்கைந்து முறை மழையும் குறுக்கிட்டு ஆட்டத்தை சோதித்தது. இதனால் ஆட்டமும் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
மிடில் ஆர்டரில் அக்சர் படேலும் கே.எல்.ராகுலும் மட்டுமே ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். அக்சர் படேல் 31 ரன்களையும் கே.எல்.ராகுல் 38 ரன்களையும் அடித்து ஆட்டமிழந்தனர். கடைசி வரை இந்திய அணிக்கு மொமண்டமே கிடைக்கவில்லை. இதனால் இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸை முடித்தது.