சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.
இந்த நிலையில், அடிலெய்டு மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கியது.
இந்தப் போட்டியில் இந்தியா தோற்றால் இந்தத் தொடரை இழப்பதோடு, அடிலெய்டில் 17 வருடமாக தோற்கவே இல்லை என்ற இந்தியாவின் சாதனையும் முடிவுக்கு வரும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியைக் காணத் தொடங்கினர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் பவுலிங்கைத் தேர்செய்தார்.
அதன்படி ஓப்பனிங் இறங்கிய கில், ரோஹித் கூட்டணிக்கு ஸ்டார்க், ஹேசில்வுட், சேவியர் பார்லெட் ஆகியோர் வேகப்பந்துவீச்சில் மும்முனைத் தாக்குதல் தொடுத்தனர்.
அதற்குப் பலனாக, சேவியர் பார்லெட்டின் ஒரே ஓவரில் கில் 9 ரன்னிலும், கோலி 0 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
அதன்பின்னர் கைகோர்த்த ரோஹித், ஸ்ரேயஸ் இருவரும் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தனர்.
பார்ட்னர்ஷிப்பில் சதத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்த இந்தக் கூட்டணியை 30-வது ஓவரில் ரோஹித்தின் (73) விக்கெட்டின் மூலம் உடைத்தார் ஸ்டார்க்.